ஜியோ 4ஜி வாய்ஸ் வேலை செய்யவில்லையா..? இதோ எளிய தீர்வுகள்.!

ஜியோ ஆப் வேலை செய்யவில்லை என கூறி ஜியோ 4ஜி வாய்ஸ் நிகழ்த்த முடியாமல் போனதுண்டா..?அந்த சிக்கல்களை எளிய வழிமுறைகள் கொண்டு தீர்க்கலாம்.

|

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் தனக்கான பாரிய இடத்தை பெற்ற உடனேயே வரம்பற்ற அழைப்புகள் மற்றும் இணைய உலாவுதல் வசதி வழங்குதல் ஆகிய பல அற்புதமான நுழைவு நிலை கட்டண திட்டங்களை அறிமுகம் செய்தது.

ஒருபக்கம் அதிரடி சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்க, மறுபக்கம் கால் டிராப் பிரச்சினை, மோசமான வாடிக்கையாளர் சேவை, சிம் செயல்படுத்துவதில் தாமதம் போன்ற பல குற்றச்சாட்டுகளுக்கு ஜியோ ஆளானது அதன் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பட்டியலும் நீண்டு கொண்டே போனது.

அப்படியான ஒரு சிக்கலில் ஒன்றுதான் ஜியோ 4ஜி வாய்ஸ் வேலை செய்யவில்லை என்பது அதை தீர்ப்பது எப்படி என்பதை பற்றிய எளிய தீர்வுகளை கொண்ட தொகுப்பே இது.!

வோல்ட் ஆதரவு கொண்டுள்ளதா.?

வோல்ட் ஆதரவு கொண்டுள்ளதா.?

ஜியோ 4ஜி வாய்ஸ் நிகழ்த்த வோல்ட் ஆதரவு இருப்பது மிக அவசியம். அது தரவு வழியாக நெட்வொர்க் அழைப்புகள் செய்ய அனுமதிக்கிறது. அனைத்து தொலைபேசிகளுக்கும் எச்டி குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் நிகழ்த்த வோல்ட் கட்டாயமாகும். எனவே, நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அனைத்தும் உங்கள் போன் வோல்ட் ஆதரவு கொண்டுள்ளதா என்பது தான்.

டெலி வெரிஃபிகேஷன்.?

டெலி வெரிஃபிகேஷன்.?

பெரும்பாலும் ஜியோ 4ஜி வாய்ஸ் வேலை செய்யாமல் போக உங்கள் ஜியோ சிம் டெலி வெரிஃபிகேஷன் செய்யாமல் இருப்பதால் தான் கூட நிகழும். எனவே உங்கள் எண் டெலி வெரிஃபிகேஷன் செய்யப்படாத என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் அதை நிகழ்த்த உங்கள் அடிப்படை விவரங்களை கையில் வைத்துக்கொண்டு 1977 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

ஆப் கட்டமைப்பு.?

ஆப் கட்டமைப்பு.?

ஒருவேளை நீங்கள் சரியான முறையில் ஆப்பை கட்டமைக்க தவறி இருக்கலாம். எனவே, நீங்கள் இப்போது வெறுமனே ஆப்பை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்து பின்னர் ஒழுங்காக அனைத்து விவரங்களை மீண்டும் பதிவிடவும்.

மொபைல் தரவு.?

மொபைல் தரவு.?

இந்த குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மொபைல் தரவு வழியாக நடப்பதை நினைவில் கொள்ள வேண்டும் அதாவது ஜியோ 4ஜி வாய்ஸ் வழியாக அழைப்புகளை முயல்வதற்கு முன் உங்கள் மொபைல் தரவு ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

ரீஸ்டார்ட் செய்யுங்கள்

ரீஸ்டார்ட் செய்யுங்கள்

மேல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் முயன்றும் ஜியோ 4ஜி வாய்ஸ் வேலை செய்யவில்லை வழியாக உங்கள் தொலைபேசி ரீஸ்டார்ட் செய்யுங்கள். அவ்வாறு செய்வது, நிச்சயமாக பிரச்சினயை தீர்க்க உதவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

புதிய ஆபர்களுடன் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஜியோ சிம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
"Jio4GVoice Not Working” Issue: Here are 5 Possible Reasons and Quick Fixes. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X