ஐபோன் : அனைத்து வகையான எஸ்எம்எஸ்-களையும் பிளாக் செய்வதெப்படி.?

Written By:

நீங்கள் ஒரு ஐபோன் பயனாளி என்றால் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் வர வாய்ப்பு அதிகம். கவலைப்பட வேண்டாம் அவைகளை உங்கள் ஐபோனினுள் நுழைய விடாது தடுப்பது எப்படி.? அதாவது பல்க் மெஸேஜ்கள் உட்பட அனைத்து வகையான ஸ்பாம் மெஸேஜ்களையும் பிளாக் செய்வது எப்படி என்பதை விளக்கும் எளிமையான வழிமுறைகள் கொண்ட தொகுப்பே இது.

ஐபோன் : அனைத்து வகையான எஸ்எம்எஸ்-களையும் பிளாக் செய்வதெப்படி.?

கீழ் வரும் வழிமுறைகள் ஆனது ஐஓஎஸ் 9 மற்றும் ஐஓஎஸ்10 கருவிகளில் ஸ்பாம் மெஸேஜ் பிளாக் நிகழ்த்துவது மற்றும் அன்பிளாக் செய்வது எப்படி என்பதை உங்களுக்கு விளக்கும்.

ஐஓஎஸ்9 கருவிகளில் ஸ்பாம் மெஸேஜ்களை பிளாக் செய்வது எப்படி.?

1) மெசேஜ் ஆப்பில் குறிப்பிட்ட ஸ்பாம் மெஸேஜை திறக்கவும்.
2) மேல்-வலது புறத்தில் உள்ள 'ஐ' ஐகானை தட்டவும்.
3) டீடெயில் என்பதற்கு கீழே அனுப்புநர் பெயரை டாப் செய்து விவரங்களை பெறவும்.
4) பிளாக் திஸ் காலர் ஆப்ஷனை டாப் செய்யவும்
5) பிளாக் காண்டாக்ட் ஆப்ஷனை டாப் செய்யவும்
6) இதை நிகழ்த்தவும் தேர்வு செய்யப்பட்ட தொடர்பு பிளாக் செய்யப்படும். அதை அன்பிளாக் செய்ய செட்டிங்ஸ் > கால் பிளாக் கிங் அன்ட் ஐடென்டிபிக்கேஷன் சென்று எடிட் ஆப்ஷனை டாப் செய்து ஒவ்வொரு நம்பரின் இடது பக்கத்தில் உள்ள சிவப்பு பொத்தானை தட்டவும்.

ஐஓஎஸ்10 கருவிகளில் ஸ்பாம் மெஸேஜ்களை பிளாக் செய்வது எப்படி.?

1) மெசேஜ் ஆப் வழியாக ஸ்பாம் டெக்ஸ்ட் மெஸேஜை தீர்க்கவும்
2) வலது மேல்பாகத்தில் உள்ள டீடெயில்ஸ் ஆப்ஷனை டாப் செய்யவும்
3) நீங்கள் குறிப்பிட்ட அனுப்புநரின் நோட்டிபிக்கேஷன்கள் பெறுவதை நிறுத்த வேண்டும்,ஆனால் நீங்கள் அவர்களை முழுவதுமாக பிளாக் செய்ய விரும்பவில்லை என்றால் நெக்ஸ்ட் டாப் செய்து டூ நாட் டிஸ்டர்ப் என்ற ஆப்ஷனை டாப் செய்யவும். இதை செய்வதின் மூலம் நோட்டிபிக்கேஷன்களை பெற மாட்டீர்கள் ஆனால் உரை செய்திகளை பெறுவீர்கள்
4) மாற்றாக, முழுமையாக பிளாக் செய்ய விரும்பினால் மேல்-வலது புறத்தில் உள்ள 'ஐ' ஐகானை தட்டவும்.
5) பிளாக் திஸ் காலர் ஆப்ஷனை டாப் செய்யவும்.

ஒருவேளை ஸ்பாமர்களை அன்பிளாக் செய்ய வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்.?

1) செட்டிங்ஸ் > போன் > பிளாக்டு என்பதற்குள் உள்நுழையவும்
2) ஸ்பாம் மெஸேஜ் அனுப்பும் நம்பரை கண்டறியவும்
3) குறிப்பிட்ட நபாம்பரை அன்பிளாக் செய்ய அதை இடது பக்கமாக ஸ்லைட் செய்யவும்'
4) இறுதியாக அன்பிளாக் டாப் செய்யவும்.

தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
iPhone: How to Block SMS From Any Sender Including Bulk Messages. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்