உபர் முதல் பயணத்தில் 100% கேஷ்பேக் பெறுவது எப்படி?

Written By:

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.500, ரூ.1000 செல்லாத என்ற அறிவிப்பால் இந்தியா முழுவதிலும் ஒரு அசாதாரண சூழ்நிலை விளங்கி வருகிறது. கையில் ஆயிரக்கணக்கில் ,லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாமல், வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு வங்கி அனுமதிக்கும் அளவு பணத்தை மட்டுமே பெற முடிகிறது.

உபர் முதல் பயணத்தில் 100% கேஷ்பேக் பெறுவது எப்படி?

இந்த பணம் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லாதபோது நாம் கண்டிப்பாக வேறு வழியை தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் ஒன்றுதான் டிஜிட்டல் பரிவர்த்தனை. ஆன்லைன் மூலம் நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டால் நமக்கு கையில் கேஷ் என்பதே பல நேரம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியா 1 ஜிபி 3ஜி டேட்டா வெறும் ரூ.89/- தான், ஆனா..

அதிலும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 100% கேஷ் திரும்ப கிடைக்கும் என்றால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது அல்லவா. ஆம், உபர் ஆப் மூலம் நீங்கள் செய்யும் முதல் பயணத்தின் கட்டணத்தை 100% திரும்ப பெறுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்

உபர் முதல் பயணத்தில் 100% கேஷ்பேக் பெறுவது எப்படி?

இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களின் பெரும் நம்பிக்கையை பெற்றுள்ள ஆப், Paytm என்பது அனைவரும் அறிந்ததே. இந்த Paytm மூலம் உபர் ஆப்-இல் உங்கள் முதல் பயணம் இறுதி செய்யப்பட்டால் உங்கள் பயணக்கட்டணம் ரூ.200 இருந்தால் அதை Paytm கட்டிவிடும். அது எப்படி என்பதை பார்ப்போம்

1. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து உபர் ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள்

2. பின்னர் அந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து பின்னர் ஓப்பன் செய்யுங்கள்

3. பின்னர் உபர் ஆப்-ஐ க்ளிக் செய்து பேமெண்ட் ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்

4. பேமெண்ட் மோட்-இல் Paytm ஐ தேர்வு செய்து க்ளிக் செய்யுங்கள்

5. அதில் ரூ.200 அல்லது அதற்கு மேலான பேமெண்ட் தொகையை செலுத்துங்கள்

6. பின்னர் உங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் விபரங்களை பதிவு செய்து பின்னர் 'Pay now" என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்

7. இப்போது உங்கள் மொபைலுக்கு வரும் OTPஐ பதிவு செய்யுங்கள்

8. பின்னர் உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்

ரூ.35,000 விலையில் டாப் 5 லாப்டாப்கள்.!

உங்கள் பயணத்தை நீங்கள் இனிமையாக முடித்துவிட்டு வந்தவுடன் அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் Paytm அக்கவுண்டில் நீங்கள் பயணம் செய்த தொகை ரூ.200 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் செலுத்தப்பட்டிருக்கும்

உபர் முதல் பயணத்தில் 100% கேஷ்பேக் பெறுவது எப்படி?

விதிமுறைகள்:

1. இந்த சலுகை உபர் ஆப் மூலம் செல்லும் முதல் பயணத்திற்கு மட்டுமே உண்டு.

2. அதேபோல் Paytm வழியாக முதன்முதலில் உபர் ஆப் மூலம் பயணம் செய்ய வேண்டும்

3. இது ஒரு குறுகிய கால சலுகைதான் .இந்த சலுகை எந்த நேரத்திலும் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

4. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இந்த சலுகையை நிறுத்தவோ அல்லது மாற்றம் செய்யவோ Paytm க்கு முழு உரிமை உண்டு,.

5. ஒருவேளை உங்களுக்கு Paytm அக்கவுண்ட் இல்லை என்றால் உடனே ஒரு அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து இந்த சலுகையை பெற்று கொள்ளலாம். புதிய அக்கவுண்ட் ஓப்பன் செய்ய Paytm.com என்ற இணையதளத்தை அணுகவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Get 100% cashback on your first Uber ride using Paytm.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்