இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எப்படி??

By Meganathan
|

உட்கார்ந்த இடத்தில் மிதமான இண்டர்நெட் வேகம் கொண்டு உலகம் முழுக்க இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளுதல், புகைப்படம் பகிர்தல் மற்றும் தகவல்களை பதிவு செய்வது என பல்வேறு பயன்பாடுகளை ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் வழங்கி வருகின்றது.

தகவல் பரிமாற்றம் துவங்கிப் பொழுதுபோக்கு, விளம்பரம் மற்றும் பல்வேறு சேவைகளை வழங்கும் ஃபேஸ்புக் தளத்தை இண்டர்நெட் இல்லாமல் பயன்படுத்த முடியும் என உங்களுக்குத் தெரியுமா?

மொபைல்

மொபைல்

பயனர்கள் இண்டர்நெட் இல்லாமல் தங்களது மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த எளிய வழிமுறை இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்தச் சேவையை வழங்க ஃபோனெட்விஷ் எனும் நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றது. அதன் படி பயனர்களுக்கு இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் சேவையை வழங்கும் பணிகளை ஃபோனெட்விஷ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அழைப்பு

அழைப்பு

மொபைல் போனில் இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்த முதலில் உங்களது மொபைலில் இருந்து *325# என்ற எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள வேண்டும்.

கணக்கு

கணக்கு

பின் மொபைல் போன் திரையில் உங்களது ஃபேஸ்புக் கணக்கின் குறியீடு ஃபேஸ்புக் (யூஸர்நேம்) மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) பதிவு செய்யக்கோரும்.

பயன்பாடு

பயன்பாடு

குறியீடு மற்றும் கடவுச்சொல் பதிவு செய்ததும், மொபைல் திரையில் தோன்றும் தகவலில் 10 நாட்களுக்கு ரூ.10 கட்டணம் பிடிக்கப்படும், இதனை உறுதிசெய்யும் தகவல் தெரியும்.

கட்டணம்

கட்டணம்

இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்த கட்டணமாக நாள் ஒன்றைக்கு ரூ.1 ஃபோனெட்விஷ் நிறுவனம் வசூலிக்கின்றது. இதனை உறுதி செய்ததும் ஃபேஸ்புக் பயன்படுத்த முடியும்.

ஆப்ஷன்

ஆப்ஷன்

கட்டணம் செலுத்திய பின் திரையில் ஃபேஸ்புக் மெனு 8 ஆப்ஷன்கள் தோன்றும், அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து ஃபேஸ்புக் பயன்படுத்த முடியும்.

டேட்டா

டேட்டா

மொபைலில் டேட்டா பேக் இல்லாத சமயங்களிலும் ஃபேஸ்புக் வசதி இல்லாத பீச்சர் போன் கருவிகளில் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
How To Use Facebook Without Internet On Your Mobile Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X