பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமலேயே மெஸெஞ்சரை பயன்படுத்துவது எப்படி.?

பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமலேயே மெஸெஞ்சரை பயன்படுத்துவது எப்படி என்பது சார்ந்த எளிய வழிமுறைகள் கொண்ட டூடோரியல்.!

|

ஒருவேளை நீங்கள் பேஸ்புக்கை கைவிடும் எண்ணம் கொண்டவர்களில் ஒருவராக இருக்கலாம் அல்லது "இந்த பேஸ்புக் தொல்லையை தாங்க முடியலடா சாமி" என்று வெறுத்துப்போன கூட்டத்தில் ஒருவராக இருக்கலாம், ஆகமொத்தம் முகநூல் பக்கமே தலைவைக்கப் பிடிக்காத நபராக இருக்கலாம், அதே சமயம் நீங்கள் பேஸ்புக்கின் மெஸெஞ்சரை மட்டும் பாரபட்சம் இலலாமல் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமலேயே மெஸெஞ்சரை பயன்படுத்துவது எப்படி.?

ஆம். உங்களின் பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமலேயே கூட உங்களால் மெஸெஞ்சரை பயன்படுத்த முடியும். இதை நிகழ்த்த பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

1. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் டிஆக்டிவேட் செய்யும் பக்கத்தை திறக்கவும். இப்போது உங்கள் பேஸ்புக் கணக்கு முடக்கப்படும். மீண்டும் நீங்கள் லாக்-இன் செய்யும் வரை உங்களின் அனைத்து பேஸ்புக் தரவும் பாதுகாப்பாக இருக்கும். ஆக, கவலை வேண்டாம்.
2. டிஆக்டிவேட் செய்தால் நீங்கள் இவைகளையெல்லாம் இழப்பீர்கள் என்று புகைப்படங்களை எல்லாம் தவிர்த்து கீழே ஸ்க்ரோல் செய்து வரவும்.
3. கடைசி ஆப்ஷன் ஆனது அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்தாலும் நீங்கள் பேஸ்புக் மெஸெஞ்சரை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்ற கேட்கப்படும். அதை 'நாட் செக்டு' என்று உறுதி செய்துவிட்டு அப்படியே விட்டு விடவும்.
4. ஸ்க்ரோல் டவுன் செய்து டிஆக்டிவேட்என்பதை டாப் செய்யவும்.
5. இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் மெஸெஞ்சரை திறக்கவும் அல்லது உங்கள் கணினியில் இணைய தளம் வழியாக லாக்-இன் செய்யவும், உங்கள் பழைய பேஸ்புக் சான்றுகள் வேலை செய்வதை எப்போதும் நிறுத்தாது என்பதை மறக்க வேண்டாம். மெஸேன்ஜர் திறக்கப்பட்டதும் நீங்கள் உங்கள் நண்பர்களுடனான அரட்டைகளை தொடரலாம்.

நீங்கள் உங்கள் கணக்கைச் செயலிழக்க செய்து விட்ட பின்னர், மெஸெஞ்சரை பயன்படுத்துவதால் நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம் கிடையாது. உங்களின் நண்பர்களால் மட்டுமே மெஸேன்ஜர் பயன்பாட்டை அல்லது பேஸ்புக் சாட் பாக்ஸ் வழியாக உங்களை தொடர்பு கொள்ள முடியும்.

ஒருவேளை உங்களிடம் ஒரு பேஸ்புக் கணக்கு இல்லை ஆனால் வெறுமனே நீங்கள் மெஸெஞ்சரை பயன்பாடுக விரும்பினால் இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

1. உங்களின் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு அல்லது அல்லது விண்டோஸ் தொலைபேசியில் பேஸ்புக் மெசேன்ஜர் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்.
2. பின்னர் இன்ஸ்டால் செய்து பயன்பாட்டை திறக்கவும் மற்றும் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்து டாப் செய்யவும்.
3. உங்கள் எண்ணை உறுதிப்படுத்த எஸ்எம்எஸ் மூலம் ஒரு குறியீடு கிடைக்கும்.
4. ஒருமுறை நீங்கள் இந்த செயல்முறைகளை முடித்த பின்னர் உங்கள் நண்பர்கள் தொலைபேசி எண்களை டைப் செய்து அவர்களுக்கு செய்திகளை அனுப்ப தொடங்க முடியும்.

"தொல்லைப்பிடித்த" லைவ் வீடியோ நோட்டிபிகேஷனை நிறுத்துவது எப்படி என்ற தமிழ் கிஸ்பாட் டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to Use Facebook Messenger Without a Facebook Account. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X