உடைந்துபோன அல்லது சேதப்பட்ட ஆண்ட்ராய்ட் போன்களை அன் லாக் செய்வது எப்படி.?

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் கை தவறி விழுந்துவிட்டதா.இந்த எளிய வழிகளை பின்பற்றி எளிமையாக அன் லாக் செய்யலாம்.

Written By:

பெரும்பாலும் மொபைலின் பின்பகுதி உறுதியாக இருந்தாலும் அதன் டிஸ்பிலே அவ்வளவு உறுதித் தன்மையுடன் இருப்பதில்லை இதன் காரணமாகவே ஏதேனும் சில தருணங்களில் கை தவறியோ அல்லது எதிர்பாராத விதமாகவோ வீழ்ந்தாலும் உடைந்து போகிறது அல்லது சேதப்படுகிறது.

அவ்வாறு மொபைல் டிஸ்பிலே உடைந்து அல்லது சேதப்பட்ட நேரங்களில் எப்படி உங்கள் லாக் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு மொபைலை அன்லாக் செய்வதனப் பார்ப்போம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

உடைந்து போன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை அன் லாக் செய்ய:

உடைந்துபோன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை அன் லாக் செய்ய முதலில் ஆண்ட்ராய்டு கண்ட்ரோல் ப்ரோகிராம் என்ற மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொண்டு டிஸ்பிலே உடைந்து போன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை உடைய கம்யூட்டரின் உடன் யூஎஸ்பி வழியே இணைத்துக்கொண்டு உங்கள் கம்ப்யூட்டரின் மௌஸ் மற்றும் கீபோர்ட் வழியே உடைந்து போன திரையை உடைய கம்ப்யூட்டரினை இயக்கலாம் அன் லாக் செய்ய இயலும்.

ஓடீஜி கேபிள் மற்றும் மவுஸ் வழியே:

இந்த முறையானது உங்கள் ஸ்மார்ட்போன் ஸுவைப் லாக் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அதனை அன்லாக் செய்ய உதவும் இதற்கு தேவை ஓடீஜி கேபிள் மற்றும் மவுஸ் ஆகும் இவற்றைக் மொபைலுடன் இணைத்து மவுஸ் வழியே நாம் திரையை அன் லாக் செய்துகொள்ளலாம்.

கூகிள் ரிமோட் அன்லாக்:

இதன் வழியே தொலைந்துபோன உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை கண்டறிய முடியும்.அன் லாக் கும் செய்ய இயலும்.இதற்கு உங்கள் கம்யூட்டரில் இருந்து ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் என்ற தளத்திற்கு சென்று உங்கள் மொபைலை தேடிக்கண்டுபிடிக்கலாம்.ஆனால் இதற்கு உங்கள் மொபைலில் ஜிபிஎஸ் வசதி ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வைசெர் மூலம்:

இந்த வைசெர் என்ற ஆப் வழி உடைந்து போன உங்கள் மொபைலை யூஎஸ்பி வழியே கம்ப்யூட்டரின் உடன் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும்.அன் லாக் செய்யவும் இயலும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How To Unlock Android Device With Cracked Or Broken Screen
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்