உங்கள் ஐபோனை மவுஸாக மாற்றுவது எப்படி.?

உங்களின் மேக்புக்கின் மவுஸராக அல்லது ட்ராக்பாட் ஆக உங்கள் ஐபோனை மாற்றலாம், தெரியுமா.?

Written By:

நீங்கள் எப்போதாவது உங்கள் ஐபோனை பயன்படுத்தி உங்கள் மேக்கை கட்டுப்படுத்த நினைத்தது உண்டா..? உங்கள் மேக் கருவியை, ஐபோன் அல்லது ஐபாட் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் அமைக்க ஆப் ஸ்டோரில் ஏகப்பட்ட ஆப்ஸ்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா.? தெரியாதெனில் தமிழ் கிஸ்பாட் உங்களுக்கு உதவ காத்திருக்கிறது வாருங்கள்..!

உங்கள் ஐபோனை மவுஸாக மாற்றுவது எப்படி.?

முன்பு கூறியது போல, ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஏகப்பட்ட மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் உங்களின் ஐபோனை மவுஸாக மாற்றலாம். இந்த கட்டுரையில், ரிமோட் மவுஸ் என்ற ஒரு ஆப் மூலம் இதை நிகழ்த்துவது எப்படி என்பதை பற்றிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. (ஏன் குறிப்பிட்ட இந்த பயன்பாட்டை பயன்படுத்த வேண்டியுள்ளது என்று கேட்டால், எந்தவொரு ட்ராக்பேட் அசைவுகளையும் இந்த ஆப் தவறவிடாது என்பது தான் பதில்)

1. உங்கள் ஐபோனில் ரிமோட் மவுஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.
2. அதே பயன்பாட்டின் மேக் வெர்ஷனையும் உங்கள் மேக்புக்கில் பதிவிறக்கம் செய்யவும்.
3. இன்ஸ்டால் செய்து சாப்ட்வேரை ரன் செய்யவும்.
4. உங்கள் ஐபோனில் பயன்பாட்டை திறக்கவும்.
5. இப்போது உங்கள் ஐபோன் மற்றும் மேக் ஆகிய இரண்டையும் இணைக்கும் நோக்கில் இரண்டிலும் 'ஸ்டார்ட்' ஆப்ஷனை டாப் செய்யவும் (நீங்கள் வைஃபை உடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது).
6. இந்த வழக்கில் கருவிகள் தானாக இணைக்கபபிடவில்லை எனில், ஐபி தேடல் ஐகானை தட்டுவதன் மூலம் உங்கள் மேக் புக்கின் ஐபி முகவரியை உள்ளிடவும்.
7.அவ்வளவு தான் இப்போது உங்கள் மேக் புக்கை உங்களின் ஐபோன் கொண்டு நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

மேலும், பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பில் சாட் ஹெட்ஸ் பெறுவது எப்படி என்பதை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Turn Your iPhone Into a Trackpad or Mouse For Mac. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்