ஒரே ஸ்மார்ட்போனில் இருந்து பல இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்குள் செல்ல வேண்டுமா?

By Siva
|

ஃபேஸ்புக், டுவிட்டர் போல தற்சமயம் இணையவாசிகளை அதிகம் கவர்ந்த ஒரு சமூக இணையதளம் இன்ஸ்டாகிராம். பெரும்பாலும் செலிபிரிட்டிகள் பயன்படுத்தும் இந்த இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் பல அக்கவுண்ட்களை ஒரே ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்

ஒரே ஸ்மார்ட்போனில் இருந்து பல இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்குள் செல்ல வேண

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலர் பெர்சனலாகவும், அலுவலக உபயோகத்திற்காகவும், என பல அக்கவுண்டுக்களை வைத்துள்ளார்கள். முன்பெல்லாம் பல அக்கவுண்ட்களை பயன்படுத்துபவர்கள் ஒரு அக்கவுண்டில் இருந்து லாக் அவுட் ஆகி, பின்னர்தான் அடுத்த அக்கவுண்டில் லாக்-இன் செய்ய முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ கட்டண திட்டங்கள், நாளை வெளியாகுமா..?

ஆனால் தற்போது ஒரே நேரத்தில் அதிகபடம் ஐந்து அக்கவுண்ட்கள் வரை ஒரே ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு வகை போன்களிலும் பயன்படுத்தலாம்.

சூப்பராய் விற்பனையான சூப்பர்போன்கள் : சூப்பர் சலுகைகளோடு நன்றி தெரிவித்த நிறுவனம்.!

கூடுதல் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை மெயிண்டன் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்

1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து பின்னர் வலது புற கார்னரில் உள்ள டிபி-ஐ க்ளிக் செய்யுங்கள்

2. அதன் பின்னர் வலதுமேல்புறத்தில் உள்ள 'Gear' அல்லது மூன்று வெர்டிகல் டாட்களை செலக்ட் செய்யவும்

3. பின்னர் அதில் உள்ள ஆப்ஷனை ஸ்குரோல் செய்து 'Add Account' என்பதை தேர்வு செய்யலாம்.

4.அதன் பின்னர் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்குள் செல்லலாம். மேலும் உங்கள் ஃபேஸ்புக் ஐடியை பயன்படுத்தியும் லாக்-இன் செய்யலாம்.

ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ சேவையைப் பெறும் டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!!

சரி ரெண்டு அக்கவுண்டில் லாக்-இன் செய்தாகிவிட்டது. அப்புறம் எப்படி இரண்டு அக்கவுண்ட்களையும் மாறி மாறி பயன்படுத்துவது. அதை தெரிந்து கொள்வோமா?

1.இன்ஸ்டாகிராமில் இரண்டு அக்கவுண்ட்களிலும் லாக்-இன் செய்த பின்னர் புரொபைல் பகுதிக்கு சென்று நீங்கள் எந்த அக்கவுண்டுக்கு செல்ல வேண்டுமோ அந்த அக்கவுண்டை க்ளிக் செய்யுங்கள்

2. இடதுபுற கார்னரில் உள்ள இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் நீங்கள் உடனே உங்களுக்கு தேவையான அக்கவுண்ட்டுக்கு செல்லலாம்.

ஆண்ட்ராய்டு போனில் அழிந்து போன காண்டாக்ட்களை மீட்பது எப்படி.??

சரி, இத்தனை அக்கவுண்ட் நமக்கு எதற்கு. ஏதாவது ஒரு அக்கவுண்டை டெலிட் செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்கிறீர்களா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா>

1. மீண்டும் முதலிலேயே சொன்னதுதான். வலதுமேல்புறத்தில் உள்ள 'Gear' அல்லது மூன்று வெர்டிகல் டாட்களை செலக்ட் செய்யவும்

2. அதில் உள்ள ஸ்குரோல் டவுனில் 'லாக்-அவுட் ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள்

3. ஒருவேளை அனைத்து அக்கவுண்ட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் 'லாக் அவுட் ஆல் தி அக்கவுண்ட் என்ற ஆப்சனை செலக்ட்ச் செய்து அனைத்து அக்கவுண்டில் இருந்து வெளியே வந்துவிடலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Support for the multiple accounts on Instagram made its debut in February this year. Now the Instagram users can add up to five accounts -- personal, official, for your dogs and much more. Previously, the users need to log out of one account and log into the other each time when they wanted to use it. This feature is available

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X