ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

ஐபோனில் காண்டாக்ட்கள் டெலிட் ஆகிவிட்டதா? கவலை வேண்டாம்

By Siva
|

ஐபோன் வைத்திருக்கும் அனைவரும் காலரை தூக்கி வைத்து கொண்டு பெருமைப்பட்டு கொண்டாலும் திடீரென ஐபோனில் உள்ள டேட்டாகள் டெலிட் ஆகிவிட்டால் உலகமே இருண்டுவிட்டது போன்று சோகத்தில் மூழ்கிவிடுவார்கள்.

ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

சில சமயம் எதிர்பாராத காரணத்தினாலோ அல்லது சிலசமயம் பவர் பிராப்ளம் காரணமாகவோ ஐபோனில் உள்ள டேட்டாக்கள் முற்றிலும் டெலிட் ஆகிவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம். டெலிட் ஆன காண்டாக்ட் உள்பட மற்ற டேட்டாக்களை எப்படி மீட்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

பொதுவாக ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட் உள்பட டேட்டாக்களை மீட்க மூன்று வழிகள் உண்டு. அவை ஐடியூன்ஸ், ஐக்ளவுட், மற்றும் மேனுவல் எக்ஸ்போர்ட். இந்த மூன்று வழிகளிலும் எப்படி மீட்பது என்பது குறித்து பார்ப்போமா?
டெலிட் ஆன ஐபோன் காண்டாக்ட்களை ஐடியூன்ஸ் மூலம் மீட்க என்ன செய்ய வேண்டும்?

கீழ்க்கண்ட ஐந்து ஸ்டெப்ஸ்கள் மூலம் ஐடியூன்ஸ் மூலம் டெலிட் ஆனவற்றை மீட்கலாம்

ஸ்டெப் 1: உங்கள் ஐபோனை கம்ப்யூட்டர் அல்லது மேக் மூலம் கனெக்ட் செய்யுங்கள்

ஸ்டெப் 2:
ஐடியூனை ஓப்பன் செய்யுங்கள்

ஸ்டெப் 3: டிவைஸ் டேப்-ஐ க்ளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 4: ஐபோனின் கனெக்சனில் வலதுபுறம் க்ளிக் செய்து அதில் தோன்றும் Restore from Backup' என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்

ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

ஸ்டெப் 5: ஐடியூனில் உள்ள X என்ற பட்டனை க்ளிக் செய்து ஆட்டோமெட்டிக் பேக் அப் செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு.

ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

ஐக்ளவுட் மூலம் மீட்பது எப்படி?

ஒருவேளை ஐடியூன் வேலை செய்யவில்லை என்றால் உங்களுக்கு இருக்கும் அடுத்த ஆப்சன் ஐக்ளவுட்ஸ். முதலில் ஐக்ளவுட் காண்டாக்ட் ஆப்சனில் பேக்கப் என்பது எனேபிள் செய்துள்ளதா? என்பதை முதலில் சோதனை செய்து கொள்ளுங்கள். இதை சோதனை செய்வதற்கு செட்டிங்ஸ் சென்று அதன் பின்னர் ஐக்ளவுட் செக்சன் சென்றால் அங்கு தோன்று காண்டாக்ட்-ஐ ஆக்டிவேட் செய்யுங்கள்

ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

இவ்வாறு ஆக்டிவேட் செய்த பின்னர் ஏதாவது ஒரு பிரெளசர் மூலம் iCloud.com என்ற இணையதளத்தை ஓப்பன் செய்யுங்கள். அதில் நீங்கள் லாக்-இன் செய்தால் அதில் மெயில், காண்டாக்ட், காலண்டர், போட்டோ உள்பட பல ஆப்சன்கள் தோன்றும். அவற்றில் காண்டாக்ட்-ஐ க்ளிக் செய்து அது இன்றுவ்ரை அப் டூ டேட் செய்யுங்கள்.

ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

இப்போது நீங்கள் காண்டாக்ட்களை மானுவலாகவே ல்லது ஐக்ளவுட் பேக்-அப் மூலமோ ரீஸ்டோர் செய்ய வேண்டும். ஐக்ளவுட் மூலம் நீங்கள் செல்ல முடிவு செய்தால் நீங்கள் இதற்காக ஐபோனில் உள்ள ஐக்ளவுட் செட்டிங்ஸ் சென்று காண்டாக்ட்-ஐ டர்ன் ஆஃப் செய்துவிட்டு அதன் பின்னர் Keep on my iphone'என்பதை செலக்ட் செய்ய வேண்டும். தற்போது நீங்கள் மெர்ஜ் செய்தால் டெலிட் ஆன உங்கள் காண்டாக்ட்கள் கிடைத்துவிடும்

ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

இனி மேனுவல் மூலம் எப்படி மீட்கலாம் என்பதை பார்ப்போம்

மற்றொரு பாதுகாப்பான வழி ஐக்ளவுட் பேக் அப்பில் உள்ள காண்டாக்ட்களை காப்பி செய்து உங்கள் ஐபோனில் வைத்து கொள்வது.

ஸ்டெப் 1: உங்கள் ஐக்ளவுடில் அனைத்து காண்டாக்ட்களும் இருக்கின்றதா? என்பதை முதலில் சோதனை செய்து கொள்ளவும்

ஸ்டெப் 2: பிரெளசர் மூலம் ஐக்ளவுடை ஓப்பன் செய்யவும்

ஸ்டெப் 3: காண்டாக்ட்களை க்ளிக் செய்யவும்

ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

ஸ்டெப் 4: இடது புறம் கீழே உள்ள செட்டிங் ஐகானை க்ளிக் செய்து அதில் தோன்றும் Export Vcards என்பதை க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 5: இந்த ஃபைலை உங்களுக்கு வசதியான இடத்தில் சேவ் செய்து கொள்ளுங்கள்

கூகுள் டிரைவ் மூலம் டாக்குமெண்ட்டுகளை பாதுகாப்பது எப்படி?

Best Mobiles in India

Read more about:
English summary
One of the scariest things is losing all our data including contacts when we try to change the iPhone or sync data to cloud/backup.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X