பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக் வீடியோ ப்ளே, நிறுத்துவது எப்படி.?

பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக் வீடியோ ப்ளே-வை நிறுத்துவது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

|

பேஸ்புக், அதன் வலைத்தளத்தில் மற்றும் ஆப்பில் ஆட்டோ-ப்ளேயிங் வீடியோக்கள் அம்சத்தை செயல்படுத்தியதின் மூலம் நீங்கள் வீடியோக்கள் பார்க்க ஒரு தாராள டேட்டா அல்லது வேகமாக இணைய இணைப்பு வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமல் ஆனது. எனினும், பல பயனர்கள் இந்த அம்சத்தை ஒரு தொந்தரவாக கருது வருகின்றனர்.குறிப்பாக நீங்கள் கீழே ஸ்க்ரோலிங் செய்யும் போது வீடியோ பாஸ் ஆகாமல் ப்ளே ஆகிக்கொண்டே இருக்க அதுவொரு எரிச்சலூட்டும் செயலாகும் வாய்ப்பு அதிகம்.

பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக் வீடியோ ப்ளே, நிறுத்துவது எப்படி.?

இம்மாதிரியான தொந்தரவை அனுபவிக்கும் பயனர்களின் ஒருவரா நீங்கள் அப்படியானால் பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக்காக ப்ளே ஆகும் வீடியோக்களை நிறுத்துவது எப்படி என்ற எளிய வழிமுறைகள் இதோ.!

நீங்கள் டெஸ்க்டாப் ப்ரவுஸர் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினால்..

1. லாக்-இன் செய்து பேஸ்புக் வீடியோ செட்டிங்ஸ் பக்கத்தில் உள்நுழையவும்.
2. ஆட்டோ ப்ளே வீடியோஸ் ஆப்ஷனின் வலது பக்கத்தில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
3. பின்னர் ட்ராப் டவுன் மெனுவில் ஆப் என்பதை தேர்வு செய்யவும்.

நீங்கள் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினால்..

1. மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை தட்டவும்.
2. ஸ்க்ரோல் டவுன் செய்து ஆப் செட்டிங்ஸ் டாப் செய்யவும்.
3. வீடியோ ஆட்டோ ப்ளே டாப் செய்யவும்.
4. வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக ப்ளே ஆவதை நிறுத்த 'ஆப்' ஆப்ஷனை தேர்வு செய்யவும் ஆல்லது 'வைஃபை ஒன்லி' ஆப்ஷன் கூட தேர்வு செய்யலாம்.

நீங்கள் ஐபோன் ஆப் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினால்..

1. வலது கீழ் மூலையின் அருகில் மோர் என்று பெயரிடப்பட்ட ஆப்ஷனின் அருகில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை தட்டவும்.
2. ஸ்க்ரோல் டவுன் செய்து அக்கவுண்ட் செட்டிங்ஸ் செல்லவும்.
3. வீடியோஸ் அன்ட் போட்டோஸ் ஆப்ஷனை டாப் செய்யவும்.
4. ஆட்டோ ப்ளே ஆப்ஷனை டாப் செய்யவும்.
5. நெவர் ஆட்டோ ப்ளே வீடியோஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும் அல்லது 'வைஃபை ஒன்லி' ஆப்ஷன் கூட தேர்வு செய்யலாம்.

வாட்ஸ்ஆப் டூ பேஸ்புக் : உங்கள் விவரங்கள் பகிரப்படமால் இருக்க என்ன வேண்டும் என்ற டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
How to Stop Facebook Videos From Automatically Playing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X