வாட்ஸ்ஆப் தரவுகளை ஃபேஸ்புக் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி?

By Meganathan
|

ஃபேஸ்புக் வசம் இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியின் பிரவைஸி பாலிசி அதாவது தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய கொள்கைகளின் படி வாட்ஸ்ஆப் செயலியில் இருக்கும் செல்போன் நம்பர்கள் ஃபேஸ்புக் தளத்துடன் இணைக்கப்பட்டு விடும். இதன் மூலம் பயனர்களுக்கு விளம்பரங்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்க ஏதுவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் செயலி நிறுவனத்தைக் கைப்பற்றிய ஃபேஸ்புக் நிறுவனம் முதல் முறையாக அதன் தனியுரிமை கொள்கைகளை மாற்றியமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய கொள்கை சார்ந்த தகவல்கள் வாட்ஸ்ஆப் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறுந்தகவல்

குறுந்தகவல்

புதிய கொள்கைகளின் படி வியாபார ரீதியிலான குறுந்தகவல்கள் அடுத்த சில மாதங்களுக்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பயனர்களின் மொபைல் நம்பர்கள் விளம்பரதாரர்களுடன் பகிர்வு செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேண்டாம்

வேண்டாம்

வாட்ஸ்ஆப் செயலி உங்களது நம்பரை ஃபேஸ்புக்'இடம் வழங்குவதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் 30 நாட்களுக்குள் வெளியேறும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரகசியம்

ரகசியம்

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது கொள்கைகளைச் சற்றே ரகசியமாக வைத்துள்ளது என்றாலும் இரு ஆப்ஷன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கியுள்ளது.

விதிமுறை

விதிமுறை

ஃபேஸ்புக் தளத்தின் மேம்படுத்தப்பட்ட சேவைகளை ஏற்கக் கோரும் 'Agree' என்ற ஆப்ஷனினை தேர்வு செய்யும் முன் அதற்கான விதிமுறைகளைப் படிக்க வேண்டும்.

நிறுத்து

நிறுத்து

விதிமுறைகளைப் படிக்கும் போது கீழ் உங்களது மொபைல் நம்பர் ஃபேஸ்புக் பயன்படுத்த கூடாது எனில் 'uncheck' என்ற ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

ஒப்புதல்

ஒப்புதல்

ஒரு வேலை ஃபேஸ்புக் தளத்தின் மாற்றப்பட்ட புதிய விதிமுறைகளை நீங்கள் ஒப்புக் கொண்டால், கூடுதலாக 30 நாட்களுக்குள் உங்களது முடிவினை வழங்க முடியும். இதற்கு Settings > Account > Share my account info ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

நிறுத்து

நிறுத்து

ஒரு வேலை வாட்ஸ்ஆப் செல் நம்பரை ஃபேஸ்புக் பயன்படுத்த கூடாது எனில் 'uncheck' அல்லது 'toggle' ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

தகவல்

தகவல்

எனினும் ஃபேஸ்புக் கிளை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்த அவர்களின் தரவுகளை சேமிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
How to stop Facebook from using your WhatsApp data Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X