ஸ்மார்ட்போன் வேகத்தை அதிகரிக்க 5 நிமிடம் போதும்.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் கருவிகளின் வேகம் வாங்கிய சில நாட்களில் குறைந்து விடுகின்றது. இதற்கு யாரையும் குறை கூற முடியாது, என்றாலும் இந்த பிரச்சனையை சரி செய்யாமலும் இருக்க முடியாது. பொதுவாக கருவியின் வேகம் குறைந்தால் அது தரம் குறைவாக இருக்குமோ என அச்சம் கொள்ள வேண்டாம்.

ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைய பல காரணங்கள் இருக்கலாம். சரியான பராமரிப்பு இன்றியும் கருவியின் வேகம் குறையலாம். இங்கு வேகம் குறைவாக இருக்கும் ஸ்மார்ட்போன் கருவியை 5 நிமிடங்களில் வேகமாக இயக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

காரணம்

காரணம்

பொதுவாக ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் கேச்சி ஃபைல்களை கருவியில் சேமித்து வைக்கும். இந்த கேச்சி ஃபைல்கள் அடிக்கடி வெப் பக்கங்களை திறக்கும், இதனால் கருவியில் ஒரே பிரவுஸர் இன்ஸ்டால் செய்வது நல்லது.

கேச்சி

கேச்சி

ஸ்மார்ட்போனின் கேச்சிகளை அழிக்க கருவியின் Settings > General > Apps > சென்று ஏதேனும் ஒரு செயலியை தேர்வு செய்ய வேண்டும். செயலியை க்ளிக் செய்ததும் செயலியின் தகவல்களை திரையில் பார்க்க முடியும். அத்தகவல்களுடன் Force Stop மற்றும் Clear Cache என இரு ஆப்ஷன்கள் இருக்கும், அதில் இரண்டாவது ஆப்ஷனை க்ளிக் செய்தால் கேச்சி அழிக்கப்பட்டு விடும்.

செயலி

செயலி

ஸ்மார்ட்போனில் எக்கச்சக்கமாக செயலிகளை இன்ஸ்டால் செய்து அவைகளில் பலவற்றை பயன்படுத்தாமலே இருப்போம். இது போன்று பயன்படுத்தாமல் இருக்கும் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்வது நல்லது.

அழித்தல்

அழித்தல்

ஸ்மார்ட்போன்களில் இருக்கும் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்ய கருவியின் Settings > General > Apps > குறிப்பிட்ட செயலியை தேர்வு செய்து Uninstall என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

விட்ஜெட்

விட்ஜெட்

ஸ்மார்ட்போன் திரையில் கவர்ச்சிகரமாகவும் அழகாகவும் தெரியும் விட்ஜெட்கள் அதிகப்படியான ரேம் பயன்படுத்தி கருவியின் வேகத்தை குறைக்கும், இதனால் விட்ஜெட்களை நீக்குவது நல்லது.

நீக்குதல்

நீக்குதல்

ஸ்மார்ட்போன் திரையில் இருந்து விட்ஜெட்களை நீக்க அதனினை சற்றே அழுத்தி பிடித்து குப்பை தொட்டி ஐகானில் இழுத்து சென்று போட வேண்டும்.

கேம்

கேம்

ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கேம்களை விளையாடுபவர்கள் அவைகளை நேரடியாக அப்ளிகேஷன் மேனேஜரில் இருந்து ஃபோர்ஸ் ஸ்டாப் செய்யலாம்.

ஃபோர்ஸ் ஸ்டாப்

ஃபோர்ஸ் ஸ்டாப்

கேம்களை ஃபோர்ஸ் ஸ்டாப் செய்ய கருவியின் Settings > General > Apps > கேம்களை தேர்வு செய்து Force Stop என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ரேம் மேனேஜ்மென்ட்

ரேம் மேனேஜ்மென்ட்

முன்னதாக குறிப்பிடப்பட்டவைகளை சிறப்பாக மேற்கொள்ள ரேம் மேனேஜ்மென்ட் செயலிகளையும் பயன்படுத்தலாம்.

செயலி

செயலி

தற்சமயம் இந்த சேவைகளை சிறப்பாக செய்யும் சில செயலிகள் க்ளீன் மாஸ்டர், சிகிளீனர், டியு ஸ்பீடு பூஸ்டர். இவைகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விசேஷ வசதியுடன் ஸ்மார்ட்போன்.!!

என்ன செய்தாலும் வேலை செய்யும் ஐபோன் எஸ்இ.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to Speed up Your Smartphone in Just 5 Minutes Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X