ரிலையன்ஸ் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் கருவியை செட்டப் செய்வது எப்படி.??

Written By:

எல்லோரையும் போல் நீங்களும் ஜியோ சிம் கார்டு வாங்கத் தவிக்கின்றீர்களா? உங்களது வீடு முழுக்க இண்டர்நெட் வசதி வழங்க உங்களுக்கு ஹாட்ஸ்பாட் கருவி தேவைப்படும்.

இதற்காகவே ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோஃபை எனும் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கருவியை வாங்கி வீடு முழுக்க எல்லாக் கருவிகளிலும் இண்டர்நெட் வசதியைப் பெற முடியும். இந்தக் கருவியின் விலை ரூ.2,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் கருவியை செட்டப் செய்வது எப்படி.??

இந்தக் கருவியுடன் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அன்-லிமிட்டெட் 4ஜி இண்டர்நெட் சேவையை அனுபவிக்க முடியும். மேலும் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் கருவியில் அதிகபட்சம் 10 கருவிகளை இணைத்துக் கொள்ள முடியும்.

அதாவது நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், டேப்ளெட், லாப்டாப் என அனைத்துக் கருவிகளிலும் இண்டர்நெட் வசதியைப் பெற முடியும். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் கருவியை செட்டப் செய்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு

ஜியோஃபை கருவியை பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு அவசியம் ஆகும். உங்களிடம் ஜியோ சிம் கார்டு இல்லையெனில் உடனே அதனினை வாங்கி அதனினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

கடவுச்சொல்

ஜியைஃபை கருவியில் SSID மற்றும் அதன் பாஸ்வேர்டினை குறித்துக் கொள்ள வேண்டும். இவை கருவியின் சிம் ஸ்லாட் அருகே காணப்படும். வை-பை நெட்வர்க் பெற இது அவசியம் ஆகும்.

சார்ஜ்

ஜியைஃபை கருவியை பயன்படுத்தும் முன் பேட்டரி பொருத்தி அதில் போதுமானளவு சார்ஜ் செய்ய வேண்டும்.

விளக்கு

ரிலையன்ஸ் ஜியோஃபை கருவியை சிறிது நேரம் சார்ஜ் செய்ததும் அதன் பவர் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

வை-பை நெட்வர்க்

ரிலையன்ஸ் ஜியோஃபை கருவியை செட்டப் செய்ததும் ஏற்கனவே குறித்த SSID மற்றும் ஜியோஃபை கருவியில் வழங்கப்பட்ட மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.

தரவுகள்

இதன் பின் ரௌட்டர் அட்மின் பேனல் சென்றோ அல்லது http://jiofi.local.html/ இணைய முகவரி சென்று தரவுகளை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
How to Setup and Connect to the Network with Reliance JioFi 4G Hotspot Device Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்