புது வாட்ஸ்ஆப் அப்டேட்டில் பழைய ஸ்டேட்டஸ் அம்சத்தை செட் செய்வது எப்படி.?

ரொம்ப ஈஸி.!

Written By:

"எப்பாடா.. ஒரு வழியாக திரும்பி வந்துடுச்சு" என்று வாட்ஸ்ஆப் பயனர்கள் அனைவருமே வெற்றிப்பெருமூச்சு விட்டுக்கொள்ளும் நேரமிது. ஆம் பெருவாரியான வாட்ஸ்ஆப் பயனர்களின் அதிருப்தி காரணமாக வாட்ஸ்ஆப் நிறுவனம் மீண்டும் அதன் பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் முறையை மறு அறிமுகம் செய்துள்ளது.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் அதன் சீரமைக்கப்பட்ட வீடியோ ஸ்டேட்டஸ் அம்சத்தை அறிமுகப் படுத்தியது மற்றும் அது வெளிப்படையாகவே ஸ்னாப்சாட் ஸ்டோரீஸ் போன்றே இருந்ததால் பயனர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதைவிட முக்கிய காரணமாக முந்தைய ஸ்டேட்ஸ் அம்சம் மீது பயனர்கள் மனரீதியாக பின்னிப்பிணைந்திருந்தனர், அதாவது தங்களின் மனநிலையை வெளிப்படுத்த வாட்ஸ்அப் ப்ரொபைல் மற்றும் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயனப்டுத்தினார் என்பது தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மீண்டும்

24 மணி நேரத்தில் தானாகவே காணாமல் போகும் புதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் முறையை நாம் விரும்ப தொடங்கும் இந்த நேரத்தில் மீண்டும் பழைய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை எளிமையான முறையில் செயல்படுத்துவது எப்படி.?

கூகுள் ப்ளே

இப்போது அதிகாரப்பூர்வமாக, கூகுள் ப்ளே மற்றும் அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளுக்கும் பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுளளது மற்றும் அது செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் மெனுவலாக சரிபார்க்கலாம்.

வி2.17.107

ஆண்ட்ராய்டு (வி2.17.107) என்ற ஒரு நிலையான வாட்ஸ்ஆப் பதிப்பில் இந்த பழைய ஸ்டேட்டஸ் அம்சம் உருட்டப்பட்டுள்ளது. மற்றும் அது ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.17.95 வழியிலேயே வேலை செய்யும்.

செட்டிங்ஸ்

அதை நிகழ்த்த வாட்ஸ்ஆப்பில் இடது மேல் புறத்தில் உள்ள மூன்று டாட் மெனுவை கிளிக் செய்யவும், பின்னர், செட்டிங்ஸ் நுழைந்து அபௌட் அண்ட் போன் நம்பர் உள்நுழையவும் அங்கு நீங்கள் பழைய ஸ்டேட்டஸ் விருப்பத்தை மீண்டும் பார்ப்பீர்கள்.

பழைய இயல்புநிலை

இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் மறையாது என்பதும், இன்னும் முக்கியமாக முன்பை போன்றே 'அவைலபில்', 'அட் ஸ்கூல்' 'பிஸி', 'அட் சினிமா' போன்றவை பழைய இயல்புநிலை விருப்பங்களுடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படிப்படியாக

முன்பு கூறியது போல, ஆண்ட்ராய்டு வாட்ஸ்ஆப் பயனர்கள் மட்டுமே இப்போது இந்த அம்சத்தை பெறுவர் மற்றும் ஐபோன் பயனர்கள் விரைவில் பெறுவர். மேலும், நீங்கள் உடனடியாக இந்த அம்சத்தை உங்கள் வாட்ஸ்ஆப்பில் பார்க்க முடியாது. இந்த வெளியீடு படிப்படியாக இருக்கலாம் ஆக இது ஒரு சில நாட்களில் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் உங்களுக்கு வந்து சேரும்.

மேலும் படிக்க

அட்டகாசம்.. இனி பேட்டரித்திறனை ஷேர் செய்து கொள்ளலாம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
WhatsApp Text Status Makes Its Return to Android. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்