எஸ்எம்எஸ் மூலம் உங்கள் புதிய பிஎஸ்என்எல் எண்ணை தேர்வு செய்யவதெப்படி?

Written By:

பாரத் சஞ்சார் ப்ரைவேட் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் (BSNL) இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். சமீபத்தில், இந்நிறுவனம் புதிதாக அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோவை எதிர்த்து சில மலிவான கட்டண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

உடன் தனது சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு சில நாகரீகமான, வசதியான சலுகைகளை வழங்கி பிற நிறுவனங்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. அவற்றில் ஒன்று தான் நீங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் எளிதாக உங்கள் புதிய பிஎஸ்என்எல் இணைப்பை பெற முடியும் பிஎஸ்என்எல் வசதி.

அது சாந்த முழு செயல்முறையை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

முதல்படியாக நீங்கள் 'NLIST FREE' என்று டைப் செய்து 53733 என்ற எண்ணிற்க்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதை நிகழ்த்தியதும் நீங்கள் மொபைல் எண்கள் பட்டியல் சார்ந்த ஒரு செய்தியை பெறுவீர்கள்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

உங்களுக்கு கிடைக்கும் மொபைல் எண் பட்டியலில் இருந்து நீங்கள் உங்களுக்கு விருப்பமான முதல் ஐந்து இலக்க எண்களை தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் '95402' என தொடங்கும் எண்ணை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஆக 'NLIST FREE 95402' என்று டைப் செய்து மேல் குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் உங்கள் தேடல் சார்ந்த எண் பட்டியல் உங்களுக்கு கிடைக்கும்.

வழிமுறை #03

நீங்கள் உங்கள் புதிய மொபைல் எண்ணை தேர்வு செய்ததும் நீங்கள் இப்போது அந்த எண்ணை 53733 என்ற எண்ணிற்கு 'CONF' என்று எஸ்எம்எஸ் செய்து அந்த எண்ணை முன்பதிவு செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

அதை நிகழ்த்தியதும் நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பும் எண் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி நிறுவனத்திடம் இருந்து ஒரு செய்தியை பெற வேண்டும். இதற்கிடையில், நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணை வேறு யாராவது ரிசர்வ் செய்திந்தால்அது ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்sளது என்ற ஒரு செய்தியை பெறுவீர்கள்.

வழிமுறை #05

இறுதியாக நீங்கள் உங்கள் ஒதுக்கப்பட்ட சிம் அட்டையை பெற அருகில் உள்ள பிஎஸ்என்எல் சென்டர் சென்று உங்களுக்கு கிடைத்த கன்பிர்மேஷன் மெசேஜ், உடன் பிஎஸ்என்எல் சென்டரில் சமர்ப்பிக்க வேண்டிய ஒரு ஏழு இலக்க பின் ஆகியவைகளை அளித்து உங்கள் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கபட்ட பின்னர் சிம் அட்டை ஒப்படைக்கப்படும். பின்னர் ஆக்டிவேஷன் நிகழ காத்திருந்து விரும்பும் பிஎஸ்என்எல் சேவைகளை அனுபவியுங்கள்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
How to Select Your New BSNL Mobile Number by SMS. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்