ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்காமல் இன்ஸ்டாகிராம் போட்டோவை 'சேவ்' செய்வதெப்படி.?

தமிழ் கிஸ்பாட் வழங்கும் எளிமையான இன்ஸ்டாகிராம் டிப்ஸ்களில் ஒன்று.!

Written By:

இன்ஸ்டாகிராம் அதன் கடைசி அப்டேட்டில், ஒருவருக்கு அனுப்பட்ட டைரக்ட் மெஸேஜை அவர் ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்கும் போதெல்லாம் அவற்றை நோட்டிபிகேஷன் மூலமாக தெரிவிக்கும் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்காமல் இன்ஸ்டாகிராம் போட்டோவை 'சேவ்' செய்வதெப்படி.?

உலகம் முழுவதிலும் உள்ள பல மக்கள் இந்த புதிய வசதியை எபப்டியாவது ஒதுக்கும் ஒரு வழியை பெற முயற்சி செய்து வரும் நிலையில், தமிழ் கிஸ்பாட் உங்கள் நண்பர் ஒருவர் அனுப்பிய உயர் தீர்மானம் புகைப்படத்தை ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி..? (இதனால் நோட்டிபிகேஷன் செல்வதையும் தடுக்கலாம்) என்பதை பற்றிய ஒரு புதிய தந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது.

வழிமுறை#01 : இந்த தந்திரம் வேலை செய்ய , நீங்கள் உங்கள் டெஸ்க்டாப் ப்ரவுஸர் மூலமாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் நுழைய வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

வழிமுறை#02 : இப்போது, நீங்கள் சேமிக்க அல்லது பதிவிறக்க வேண்டும் என்று விரும்பும்,போஸ்டை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ரைட்-கிளிக் செய்து 'வியூ சோர்ஸ்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்காமல் இன்ஸ்டாகிராம் போட்டோவை 'சேவ்' செய்வதெப்படி.?

வழிமுறை#03 : இப்போது உங்களுக்கு பல குறியீடுகள் காட்டபப்டும். பயப்பட வேண்டாம். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 162-வது வரிக்கு சென்று மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போன்ற யூஆர்எல் குறியீட்டை 'காப்பி' செய்யவும்.

வழிமுறை#04 : இப்போது, நீங்கள் ஒரு புதிய விண்டோவை திரண்டு 'காப்பி' செய்த யூஆர்எல்-ஐ பதிவிட்டு எண்டர் தட்டவும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் உயர் தீர்மானம் படத்தை பார்க்க முடியும். இப்பொது ரைட்-கிளிக் செய்து குறிப்பிட்ட படத்தை சேமிக்கவும் முடியும்.

ஒன் மோர் டிப்ஸ் : மலிவான ஐபோன் சார்ஜர்கள் பாதுகாப்பானதா.? வெடிக்குமா.? சோதிப்பது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How to Save Instagram Photos Without Taking a Screenshot. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்