ஆண்டிவைரஸ் மென்பொருள் இன்றி வைரஸை அழிப்பது எப்படி.??

Written By:

வைரஸ் என்பது கம்ப்யூட்டர் மென்பொருள் என்றும் இது கணினிகளில் தானாகக் காப்பி செய்து அவற்றைப் பழுதாக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வைரஸ் என்ற வார்த்தை குறிப்பாக மால்வேர், ஆட்வேர் அல்லது ஸ்பைவேர் போன்ற மென்பொருள்களைக் குறிக்கும். உண்மையான வைரஸ் என்பது ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு பரவி அவற்றைப் பாழாக்கும்.

பொதுவாக வைரஸ் பாதிக்கப்பட்ட கணினி அல்லது பென் டிரைவ் போன்றவற்றை ஆண்டிவைரஸ் மென்பொருள் மூலம் அழிக்கவோ அல்லது பிரச்சனையை சரி செய்யவோ பயன்படுத்துவோம். ஆனால் எவ்வித ஆண்டிவைரஸ் மென்பொருள் இன்றி வைரஸ்களை அழிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா.??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கமாண்ட் பிராம்ப்ட்

ஆண்டிவைரஸ் மென்பொருளின்றி வைரஸ்களை அழிக்க கமாண்ட் பிராம்ப்ட் பயன்படுத்த வேண்டும். இதற்குக் கணினியின் சர்ச் டேப் சென்று CMD என டைப் செய்து என்டர் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

டிரைவ்

கமாண்ட் பிராம்ப்ட் திரை திறந்ததும் அதில் வைரஸ் பாதிக்கப்பட்ட டிரைவ் பெயரை தேர்வு செய்ய வேண்டும்.

குறியீடு

பின் கமாண்ட் பிராம்ப்ட் திரையில் attrib -s -h *.* /s /d என டைப் செய்து என்டர் பட்டனினை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து dir என டைப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட டிரைவில் இருக்கும் தரவுகளை நீங்கள் பார்க்க முடியும்.

பெயர்

டிரைவில் இருக்கும் தரவுகள் ஓபன் ஆனதும் அதில் autorun.inf என்ற பெயரில் ஏதேனும் ஃபைல் இருக்கின்றதா என்பதைப் பார்த்து, இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதன் பெயரை மாற்ற வேண்டும்.

கம்ப்யூட்டர்

இதனைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் ஆப்ஷன் சென்று குறிப்பிட்ட டிரைவில் பெயர் மாற்றம் செய்த ஃபைலினை நிரந்தரமாக டெலீட் செய்ய வேண்டும். பெயர் மாற்றம் செய்த ஃபைலினை கமாண்ட் பிராம்ப்ட் ஆப்ஷன் மூலமாகவும் அழிக்க முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படம் : instructables 

English summary
How to Remove virus without any anti virus software Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்