மொபைலில் அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீட்பது எப்படி.??

Written by: Aruna Saravanan

மொபைல் போன் பயன்படுத்தும் போது சில நேரங்களில் நம்மையே அறியாமல் சில மெசேஜ்களை டெலீட் செய்துவிடுவோம். அதில் மிக முக்கியமான மெசேஜ்களாக இருந்தால் உடனே கோபம் அதிகரித்து என்ன செய்வதென பெரும்பாலானோர் கவலை கொள்வர்.

ஆனால் இனி கவலை இல்லை, உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இதற்காக ஆப்ஷன் உள்ளது. உங்கள் போன் மற்றும் கணினியை பயன்படுத்தி அழித்த மெசேஜை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இதற்கென கணினி மற்றும் மேக் சார்ந்த அப்ளிக்கேஷன்கள் இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வழிமுறை

இதை செயல்படுத்தும் போது முதலில் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மெமரியில் ஸ்கேன் செய்யும், பின்பு கண்டுபிடிக்கும் அதன் பின் திரும்ப பெற செய்யும்.

டெவலப்பர் மோடை செயல் படுத்தவும்

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் டெவலப்பர் மோடை செயல்படுத்த வேண்டும். இதற்கு டிவைஸ் செட்டிங் சென்று About phone சென்று Build number என்பதை டெவலப்பர் ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டது என்ற அறிவிப்பு கிடைக்கும் வரை தட்டவும்.

USB debugging

இதற்கு டெவலப்பர் ஆப்ஷன் சென்று USB debugging சென்று பாக்ஸை செக் செய்யவும்.

பதிவிறக்கம்

தேவையான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து இலவச ரெக்கவரி மென்பொருளை நிறுவவும். பின்பு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை உங்கள் கணினிக்கு இணைக்க வேண்டும்.

கருவி

ரெக்கவரி ப்ரோகிராமில் உங்கள் கருவியை கண்டுபிடிக்க promptsஐ பின்பற்றி ஸ்கேன் செய்து பின்பு ஆண்ட்ராய்டு மெமரியை ஆராய்ந்து பார்க்கவும்.

ப்ரீவியூ

உங்கள் ஸ்மார்ட்போனை டிடெக்ட் செய்த பின்பு நீக்கப்பட்ட மற்றும் நீக்கப்படாத தரவுகளை பிரவுஸ் செய்து preview செய்து பார்க்கவும்.

ரிக்கவர்

பின் மெசேஜஸ் ஃபோல்டரை திறந்து உங்களுக்கு தேவையான மெசேஜ்களை தேர்வு செய்து ரிக்கவர் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் கணினி அல்லது மொபைலில் மீட்கப்பட்ட மெசேஜ்கள் சேவ் செய்யப்பட்டு விடும்.

மேலும் படிக்க

மைக்ரோசாப்ட் வேர்டு எளிய தந்திரங்கள்.!!

வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த எளிய வழிமுறைகள்.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
How to Recover Deleted Text Messages on Android Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்