உங்களின் தற்போதைய நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்வது எப்படி.?

ரிலையன்ஸ் ஜியோவிற்கு மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

|

மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி அம்சம் ரிலையன்ஸ் ஜியோவில் உண்டு என்பது தான் ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற மற்ற மொபைல் சேவைகளை பயனபடுத்தி வரும் பெரும்பாலான வடிக்கையாளர்களின் மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். ஆம். நீங்கள் எந்தவொரு டெலிகாம் சேவையை பெறும் வாடிக்கையாளராக இருந்தாலும் கூட எம்என்பி அம்சம் மூலம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக்கு மாறி அந்நிறுவனம் வழங்கும் வரம்பற்ற இலவச சேவைகளை அனுபவிக்க முடியும்.

மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி நிகழ்த்துவதின் மூலம் உங்களின் தற்போதைய மொபைல் எண் மாற்றம் அடையாது என்பது குறிப்பிடத்தக்கது இதை நிகழ்த்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அனைத்தும் இங்கு தொகுக்கப்பட்டுள்ள 5 எளிமையான வழிமுறைகளை அப்படியே பின்பற்றினால் போதும்.

வழிமுறை #01

வழிமுறை #01

முதலில் 1900 என்ற எண்ணிற்கு "PORT Mobile Numbe" (போர்ட் மொபைல் நம்பர்) என்று ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும். நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்ப பயன்படுத்திய எண் தான் ரிலையன்ஸ் ஜியோவிற்கு போர்ட் செய்ய நீங்கள் விரும்பும் எண் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இந்த எஸ்எம்எஸ் உங்களின் தற்போதைய சேவை வழங்குநரிடம் இருந்து வெளியேற விரும்பும் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிக்கும் (உங்கள் தற்போதைய சேவை வழங்குனரின்படி எஸ்எம்எஸ் கட்டணம் வசூலிக்கப்படலாம்)

வழிமுறை #02

வழிமுறை #02

நீங்கள் ஒரு யூனிக் போர்ட் கோட் (யூ.பி.சி) கொண்ட ஒரு எஸ்எம்எஸ்-தனை பெறுவீர்கள். இந்த யூ.பி.சி ஆனது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் அந்த யூ.பி.சி தான் உங்கள் தற்போதைய சேவை வழங்குநரிடம் இருந்து உங்கள் சேவையை ரிலையன்ஸ் ஜியோவிக்ரு மாற்றும் ஒரு முக்கிய பங்களிப்பாகும்.

வழிமுறை #03

வழிமுறை #03

இப்போது நீங்கள் ஒரு அருகாமை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடையை கண்டறிய வேண்டும் மற்றும் பின்னர் அங்கு வருகை புரிந்து வாடிக்கையாளர் விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும். கொடுக்கப்பட்ட படிவத்தில் உள்ள அனைத்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

அடுத்து, அடையாள அட்டை, குடியிருப்பு சான்று, ஆதார் / நிரந்தர கணக்கு எண் அட்டை, மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் போன்ற அனைத்து முக்கிய ஆவணங்களையும் வழங்க வேண்டும். கடையில் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் மற்றும் புகைப்படங்களையும் சேர்த்து, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும்.

வழிமுறை #05

வழிமுறை #05

ஒரு புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு உங்களுக்கு வழங்கப்படும். எனினும், தொலைத் தொடர்பு விதிமுறைகளின் படி, நீங்கள் உங்கள் தற்போதைய சேவை வழங்குநரின் கீழ் அடுத்த ஐந்து நாட்கள் நீடிப்பீர்கள், ஆறாம் நாளில் தற்போதைய சிம் அட்டையை நீக்கி, உங்கள் 4ஜி ஆதரவு கொண்ட கைபேசியில் உங்கள் புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு நுழைத்து, அதன் சேவைகளை அனுபவிக்க வேண்டியது தான்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

2017-ல் எந்தெந்த கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு நௌவ்கட் அப்டேட்.? (முழு பட்டியல்)

Best Mobiles in India

Read more about:
English summary
How to port your number to Reliance Jio 4G SIM card through MNP. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X