ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கியில் ஒரு அக்கவுண்ட்டை திறப்பது எப்படி.?

ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் அனைத்து 29 மாநிலங்களிலும் நாடு முழுவதும் செயல்படக்கூடிய 250,000 ஏர்டெல் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்க பெறுகின்றது.

Written By:

ஏர்டெல் பேமன்ட்ஸ் பேங்க் - முதல் பேமண்ட் வங்கியானது கடந்த வியாழனன்று, புது தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மூலம் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. ஏர்டெல் கடந்த நவம்பர் மாதம் ஒரு பைலட் பேமண்ட் வங்கித்திட்டத்தை முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 10,000 ஏர்டெல் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் அனைத்து 29 மாநிலங்களிலும் நாடு முழுவதும் செயல்படக்கூடிய 250,000 ஏர்டெல் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்க பெறுகின்றது. சரி, இந்த ஏர்டெல் பேமண்ட் வங்கியில் உங்களுக்கான ஒரு கணக்கை (அக்கவுண்ட்) தொடங்குவது எப்படி என்பது சார்ந்த எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

யாரெல்லாம் ஒரு ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி கணக்கு திறக்க முடியும்?

ஆதார் அட்டை கொண்டுள்ள எவரும் ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கை திறக்க முடியும்.

ஒரு கணக்கை திறக்க ஏர்டெல் மொபைல் சந்தாதாரராக இருக்க வேண்டும்?

இல்லை. நீங்கள் ஆதார் அட்டை வைத்திருந்தால், நீங்கள் ஒரு ஏர்டெல் மொபைல் சந்தாதாரராக இல்லாமலேயே ஒரு கணக்கை திறக்க முடியும்.

ஒரு கணக்கை திறக்க என்னென்ன செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.?

அருகாமையில் உள்ள நியமிக்கப்பட்ட ஏர்டெல் சில்லறை விற்பனை நிலையத்திற்கு உங்கள் ஆதார் எண் உடன் செல்வதின் மூலம் உங்களால் ஒரு கணக்கை திறக்க முடியும். பேப்பர்லெஸ் ப்ராசஸ் அதாவது ஆவணங்கள் இல்லாத செயல்முறை மூலம் சில நிமிடங்களில் ஒரு ஆட்டோமொபைல் செயல்முறை மூலம் உங்களுக்கான அக்கவுண்ட் திறக்கப்படும்.

இந்த வங்கி முறையில் டெபிட் / கிரெடிட் அட்டை வசதி இருக்குமா.?

ஆரம்பத்தில் ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கியால் ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் அட்டை வசதியை வழங்க முடியாது. உங்களால் எந்தவொரு நியமிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும், எந்த நேரத்திலும் பணத்தை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க முடியும்.

என் கணக்கின் பேலன்ஸை பரிசோதிப்பது எப்படி.?

இதுவொரு ஆட்டோமொபைல் வங்கி என்பதால், நீங்கள் உங்கள் கணக்கின் பேலன்ஸ் மற்றும் அணுகல்களை ஏர்டெல் மணி பயன்பாட்டு, யுஎஸ்எஸ்டி குறியீடு அல்லது உங்கள் மொபைல் போனில் உள்ள ஐவிஆர் (IVR) வசதிகள் பயன்படுத்தி பார்க்கலாம்.

எனது நண்பர் அல்லது என் குடும்பத்திற்கு பண பரிமாற்றம் செய்வது எப்படி.?

நீங்கள் உங்கள் ஏர்டெல் மணி பயன்பாட்டு அல்லது *400# என்ற யுஎஸ்எஸ்டி கோட் மூலம் பணம் பரிமாற்ற சேவைகளை அணுக முடியும். ஏர்டெல் வங்கிக்குள்ளான ஏர்டெல் எண்களுக்குள் நிகழும் பணம் இடமாற்றங்கள் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி கணக்கில் பணத்தை டிபாசிட்

செய்ய கிடைக்கும் வட்டி விகிதம் என்ன.?
சேமிப்பு கணக்குகள் உள்ள வைப்புக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி விகிதம் கொடுக்கும் நோக்கம் கொண்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
How to open an Airtel Payments Bank account. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்