பிஎஸ்என்எல் : இன்டர்நெட் வேகத்தை 100% அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..?

Written By:

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட், இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தபப்டும் இணைய சேவையில் ஒன்றாகும். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நல்ல இணைய சலுகைகள் மலிவு விலையில் கிடைக்கப்பெறும் போதும், சில நேரங்களில் பிஎஸ்என்எல்-ன் இணைய வேகம் மெதுவாக உள்ளது என்பது தான் நிதர்சனமாகும்.

மிகவும் எரிச்சலூட்டும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட் வேக குறைவை எப்படி 100% அதிகரிக்க முடியும் என்பதை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பப்ளிக் டிஎன்எஸ் சர்வர்களை பயன்படுத்தவும்.!

பிஎஸ்என்எல்-ன் டிபால்ட் டிஎன்எஸ் சர்வர் ஆனது கூகுள் டிஎன்எஸ் அல்லது ஓப்பன் டிஎன்எஸ் உடன் கிடைக்காது அதன் விளைவாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனாளிகள் மெதுவான இன்டர்நெட் வேகத்தை சந்திக்க நேரிடும்.

கூகுள் டிஎன்எஸ் :

ஆகையால் நீங்கள் எப்போதும் நல்ல இணைய வேகம் பெற உங்கள் டிபால்ட் டிஎன்எஸ் கேட்வே-தனை கூகுள் டிஎன்எஸ் அல்லது ஓப்பன் டிஎன்எஸ்-ற்க்கு மாற்றிக் கொள்ளவும். இந்த தவறை பெரும்பாலான பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்கள் செய்கிறார்கள்.

டிஎன்எஸ் சர்வரை செட் செய்வது எப்படி.?

உங்கள் பிராட்பேண்ட் டிஎன் எஸ் சர்வரை மாற்றியமைக்க :
கண்ட்ரோல் பேனல் -> நெட்வெர்க் அன்ட் ஷேரிங் -> சேன்ஜ் அடாப்டர் செட்டிங்ஸ் -> செலெக்ட் லான் யுவர் அடாப்டர் -> ரைட் கிளிக் செய்து -> ப்ராபர்டீஸ் -> செலெக்ட் இன்டர்நெட் ப்ரோடோகால் வெர்ஷன் 4 (ஐபிவி4)

சர்வர்கள் :

பின் மீண்டும் ப்ராபர்டீஸ் சென்று டிஎன்எஸ் செட்டிங்ஸை கீழ்வரும்படி மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
பப்ளிக் கூகுள் டிஎன்எஸ் சர்வர்கள் :
Primary DNS server: 8.8.8.8
Preferred DNS server: 8.8.4.4
ஓப்பன் டிஎன்எஸ் சர்வர்கள் :
Primary DNS server: 208.67.222.222
Preferred DNS server: 208.67.220.220

எப்போதும் நல்ல ஏடிஎஸ்எல் மோடம் பயன்படுத்தவும்..!

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைய வேக சிக்கலை தீர்க்க அடுத்த வழி இதுதான். பிற மோடம்களை ம ஏடிஎஸ்எல் மோடம் ஒரு நல்ல சேவையை பயன்படுத்த உதவும்.

உங்கள் கணினியில் இருந்து வைரஸ்களை நீக்கி விடவும்.!

இது அனைத்து வகையான நெட்வெர்க்குகளுக்கும் செய்ய தகுந்த ஒன்றாகும்.

உறுதி :

உங்கள் கணினியில் தீம்பொருள் அல்லது வைரஸ் பாதிப்புகள் இருந்தால் நீங்கள் மெதுவான இணைய வேகம் பெறலாம் ஆக உங்கள் கணினியில் அனைத்து நேமும் கண்காணிக்கப்படும்ஒரு ஆன்ட்டி-வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதை எப்போதும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பிஎஸ்என்எல் போன் மீதும் ஒரு கண்வைத்துக்கொள்ளுங்கள் :

நீங்கள் பிஎஸ்என்எல் தொலைபேசியில் இடையூறுகள் சந்தித்தால் அது மெதுவான இன்டர்நெட் வேகத்தை ஏற்படுத்தும். ஆக நீங்கள் தொலைபேசி இணைப்பு பிரச்சினைகளை எதிர்கொண்டால் உடனடியாக கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு அதை சரி செய்து கொள்ளவும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
How to Increase Your Slow BSNL Broadband Speed up to 100%. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்