ஐபோன் 6 எஸ்-ல் இலவசமாக 60ஜிபி ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

Written By:

இந்தியவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோவை அதிகம் எதிர்த்து செய்லபடும் ஒரு நிறுவனமாக திகழ்கிறது. ஏர்டெல் தனது ஒவ்வொரு பயனர்களுக்கும் குறிப்பிட்ட காலம் வரையிலான இலவச 4ஜி தரவு பெற முடியும்படியான தேர்ந்தெடுக்கப்பட்ட கைபேசிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி வருகிறது.

மேலும் 6எஸ் பிளஸ், சியோமி ரெட்மீ நோட் 3 போன்ற கருவிகள் முழு இலவச 4ஜி தரவை பெற தகுதியான சாதனங்களாய் இருப்பது ஒருபக்கம் இருக்க அந்த பட்டியலில் ஐபோன் 6 எஸ் கருவியும் உள்ளது. அதை பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

ஏர்டெல் வழங்கும் இந்த சலுகையை பெற உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு ஐபோன் 6 எஸ் கருவியாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் பின்னர் கீழ்வரும் வழிமுறைகளை செயல்படுத்தவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு நீங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் இருக்க வேண்டும். நீங்கள் என்றால் ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர் என்றால் இந்த வாய்ப்பை பெற இயலாது. உடன் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய இன்பினிட்டி திட்டத்தின் கீழ் இருக்கும் ரூ.999/- பேக் அல்லது அதனை விட அதிகமான பேக் தனை சப்ஸ்க்ரைப் செய்கிறீர்கள் என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வழிமுறை #03

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால் இந்த சலுகையை பெற உங்கள் ஐபோன் 6 எஸ் கருவியில் இருந்து இந்த லின்க் இணைப்பை அணுகவும் - www.airtellive.com/offers. முக்கியமாக நீங்கள் ஒரு ஏர்டெல் இண்டர்நெட் திட்டத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் வைஃபை மூலம் இந்த இணைப்பிற்குள் உங்களால் நுழைய இயலாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

குறிப்பிட்ட வலை பக்கம் திறந்த பின்னர், நீங்கள் அங்கே உங்களின் ஏர்டெல் போஸ்ட்பெய்டு மொபைல் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் சலுகையை பெற தகுதியானவர் என்றால், இலவச தரவு 48 மணி நேரத்திற்குள் உங்கள் பேலன்ஸில் வரவு வைக்கப்படும்.

வழிமுறை #05

நீங்கள் ஒரே நேரத்தில் முழுமையாக 60ஜிபி அளவிலான 4ஜி தரவையும் பெற இயலாது. அதற்கு பதிலாக, ஏர்டெல் நிறுவனம் கைமுறையாக 5ஜிபி அளவிலான 4ஜி தரவை ஒவ்வொரு மாதமாக மொத்தம்12 மாதங்கள் தொடர்ந்து வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

10 ஜிபி 4ஜி தரவு : ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா, எது பெஸ்ட்.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to Get 60 GB 4G data for free on Airtel with Apple iPhone 6s. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்