4ஜி நெட்வர்க் வேலை செய்யவில்லையா? இப்படியும் சரி செய்யலாம்.!

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நாடு முழுக்க 4ஜி சேவைக்கான தேவை அதிகரித்திருக்கின்றது. முன்னதாக ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கின, இருந்தும் அதிக கட்டணம் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பலரும் 4ஜி சேவையைப் பயன்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையை ரிலையன்ஸ் ஜியோ 4ஜி முற்றிலுமாக மாற்றியது என்றே கூறலாம்.

இந்தியர்களின் மன நிலையைச் சரியாக கனித்து அதிகப்படியான இலவசங்களுடன் களமிறங்கிய ஜியோ மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. நாளுக்கு நாள் ஜியோ பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு எடுத்துக்காட்டு. ஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணங்களை குறைத்து வருகின்றது.

4ஜி நெட்வர்க் வேலை செய்யவில்லையா? இப்படியும் சரி செய்யலாம்.!
ஒட்டுமொத்தமாக 4ஜி பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் பலரும் 4ஜி சேவையில் கோளாறுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். அதிகளவு சிக்னல் கோளாறுகளும், கால் டிராப், சீரான வேகமின்மை எனக் குற்றச்சாட்டு பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

4ஜி நெட்வர்க் கோளாறுகளை எதிர்கொள்ளவும், சீரான 4ஜி சேவையைப் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

சிக்னல் கோளாறு

சிக்னல் கோளாறு

பெரும்பாலானோர் 4ஜி சேவையில் சீரான சிக்னல் கிடைப்பதில்லை என்ற குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முதலில் உங்களது ஸ்மார்ட்போன் 4ஜி சேவையைப் பெற்றிருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சில ஸ்மார்ட்போன்களில் 3ஜி நெட்வர்க் மட்டுமே வழங்கப்படுகின்றன.

4ஜி ஸ்மார்ட்போன்களில் 3ஜி சிக்னல்

4ஜி ஸ்மார்ட்போன்களில் 3ஜி சிக்னல்

சிலர் 4ஜி ஸ்மார்ட்போன்களிலும் 3ஜி சிக்னல் மட்டுமே கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்கு உங்களது பகுதியின் நெட்வர்க் ஆப்பரேட்டராக இருக்கலாம். முதலில் உங்களது பகுதியில் 4ஜி சேவை வேலை செய்யுமா என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களது பகுதியில் 4ஜி நெட்வர்க் இல்லையென்றால் 3ஜி நெட்வர்க் மட்டுமே கிடைக்கும்.

குறைவான டேட்டா வேகம்

குறைவான டேட்டா வேகம்

4ஜி நெட்வர்க்களின் முக்கிய நோக்கம் அதிவேக இண்டர்நெட் வழங்குவதே ஆகும், ஆனால் 4ஜியிலும் குறைவான வேகம் மட்டுமே கிடைக்கின்றது எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தப் பிரச்சனையை சரி செய்ய உங்களது ஸ்மார்ட்போனின் APN அழித்து கருவியை ரீசெட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இண்டர்நெட் வேகம் அதிகரிக்கும்.

நெட்ரவ்க் பேன்ட்

நெட்ரவ்க் பேன்ட்

பொதுவாக 4ஜி நெட்வர்க் சேவையானது 1800MHZ, 2300MHZ, 800MHZ மற்றும் பல்வேறு இதர ஸ்பெக்ட்ரம் மூலம் வழங்கப்படுகின்றது. சில ஸ்மார்ட்போன்களில் இந்த பேன்ட்கள் வேலை செய்யாமல் இருக்கலாம். அதனால் கருவியை வாங்கும் போது சரியான நெட்வர்க் பேன்டினை தேர்வு செய்ய வேண்டும்.

கால் டிராப் பிரச்சனை

கால் டிராப் பிரச்சனை

அழைப்புகளை மேற்கொள்ளும் போது திடீரென நெட்வர்க் 3ஜி அல்லது 2ஜிக்கு மாறினால் உங்களது அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும். இதற்கு சிக்னல் கிடைப்பதை சரியாகக் கவனிப்பதை தவிரத் தற்சமயம் வரை சரியான தீர்வு கிடையாது.

Best Mobiles in India

English summary
How to Fix Problems of 4G LTE Network in India Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X