ஸ்மார்ட்போன் டேட்டா கோளாறுகளைச் சரி செய்வது எப்படி??

Written By:

ஸ்மார்ட்போன்களில் இண்டர்நெட் வசதி பயன்படுத்த அதிகளவு வை-பை கனெக்ஷன் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பென் டிரைவ் அளவு கொண்ட கருவியில் வை-பை வசதி வழங்கும் கருவிகள் இதற்கு முக்கிய காரணம் எனலாம்.

காரணம் எதுவானாலும் வை-பை பயன்படுத்துமளவு மொபைல் டேட்டா பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. சில சமயம் வை-பை கனெக்ஷனில் வேலை செய்யும் இண்டர்நெட் மொபைல் டேட்டாவில் வேலை செய்யாமல் போகும்.

இந்த கோளாறினை நீங்களாகவே சரி செய்வது எப்படி என்பதைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கனெக்ட்

முதலில் மொபைல் போனில் இண்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யுங்கள், ஒரு வேலை இண்டர்நெட் இணைக்கப்பட்டிருந்தால் மொபைல் நெட்வர்க் ஆப்பரேட்டரை தொடர்பு கொண்டு உங்களது ஏரியாவில் நெட்வர்க் கோளாறு ஏதும் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.

ஸ்விட்ச் ஆஃப்

மொபைல் போனில் எவ்வித கோளாறு ஏற்பட்டாலும் அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்வது நல்ல பலன்களை தரும். பெரும்பாலும் குறிப்பிட்ட சில கோளாறுகளை தீர்த்து விடும்.

சிம் கார்டு

ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்தும் மொபைல் டேட்டா வேலை செய்யவில்லை எனில் சிம் கார்டினை கழற்றி மாற்ற வேண்டும். சிம் கார்டு அல்லது சிம் டிரேக்களில் அதிகளவு தூசி இருக்கும் பட்சத்தில் இது போன்ற கோளாறுகள் ஏற்படலாம்.

ஏபிஎன்

இவை எதுவும் வேலை செய்யாத போது கருவியின் ஏபிஎன் (APN) செட்டிங்ஸ்களை மாற்ற வேண்டும். இவற்றை வைத்தே உங்களது மொபைல் போன் டேட்டா சிக்னல்களுடன் இணைந்து இண்டர்நெட் வழங்கும்.

செட்டிங்ஸ்

ஏபிஎன் செட்டிங்ஸ்களை மாற்றப் போனின் செட்டிங்ஸ் சென்று ரீசெட் நெட்வர்க் செட்டிங்ஸ் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் மொபைல் டேட்டா பெரும்பாலும் சீராக வேலை செய்யும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How To Fix mobile data not working android Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்