ஜியோ சிம் வேலை செய்யவில்லை, சரி செய்ய சில தந்திரங்கள்!

உங்களது மொபைலில் ஜியோ சிம் வேலை செய்யாவிட்டால், அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Written By:

இந்தியாவில் தற்சமயம் அனைவரும் உடனே வாங்க வேண்டும் எனக் காத்திருப்பது ஜியோ சிம் வாங்க வேண்டும் என்பதாகவே இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள சேவைகளை வைத்துப் பார்க்கும் போது இந்த நிலை ஒன்றும் ஆச்சரியப்படும் அளவு இல்லை.

செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கிய ஜியோ சேவைகளைப் பெற இன்றளவும் தட்டுப்பாடு இருக்கத் தான் செய்கின்றது. இது ஒருபக்கம் இருக்க அதிகப்படியான பயனர்களால் ஆங்காங்கே சிறு சிறு பிரச்சனைகள் எழுவதாக ஜியோ பயனர்கள் குற்றச்சாட்டத் துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோவில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கும் அதற்கான தீர்வுகளையும் இங்கு வழங்கியுள்ளோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சிம் கார்டு வேலை செய்யவில்லை

பொதுவாகக் கருவியில் சிம் கார்டு பொருத்தியதும் அதில் சிகனல் பார்கள் தெரியாமல் போகும் பட்சத்தில் சிம் கார்டு வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழும். இதற்கான தீர்வுகள்..
* முதலில் கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
* பின் சிம் கார்டினை வெளியே எடுத்து மீண்டும் பொருத்த வேண்டும்.
* இனியும் சிம் கார்டு வேலை செய்யவில்லை எனில் ஜியோ சிம் உங்களது கருவியில் வேலை செய்யாது என்றே அர்த்தமாகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிம் கார்டு வேலை செய்து சிக்னல் கிடைக்கவில்லை

* முதலில் சிம் கார்டு ஒழுங்காகப் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரி பாருங்கள், கருவியில் டூயல் சிம் ஸ்லாட் இருந்தால் ஜியோ சிம் கார்டினை முதல் ஸ்லாட்டில் பொருத்துங்கள்.
* அடுத்துக் குறிப்பிட்ட சிம் ஸ்லாட்டில் டேட்டா ஆன் செய்யப்பட்டுள்ளதைச் சரி பாருங்கள்.

பிரைமரி டேட்டா

* பின் நெட்வர்க் செட்டிங்ஸ் இல் பிரைமரி டேட்டாவிற்கு சிம் ஸ்லாட் 1 தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுங்கள்.
* இனி போனில் LTE நெட்வர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு Settings > Mobile Networks > Preferred network type ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏபிஎன் செட்டிங்ஸ்

* தேவைப்பட்டால் கருவியில் ஏபிஎன் செட்டப் செய்யுங்கள். ஜியோ சிம் உங்களின் கருவிக்கு பொருந்தினால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதற்கு Settings > Mobile Networks > Access Point Names ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.

மேனுவல் செட்டிங்ஸ்

* இனி நெட்வர்க் ஆப்பரேட்டரை மேனுவலாக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு Settings > Mobile Networks > Network Operators செல்ல வேண்டும்.
* ஜியோ சிம் வேலை செய்யவில்லை எனில் ஏதேனும் மென்பொருள் அல்லது வன்பொருள் சார்ந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிம் கார்டு வேலை செய்து, அழைப்புகளை மேற்கொள்ள இயலவில்லை

முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஜியோ ஜாயின் ஆப் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்தத் தற்சமயம் வரை ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளங்களில் வேலை செய்யவில்லை.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to fix Jio SIM not working error in your phone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்