சாம்சங் கேலக்ஸி எஸ்7 பிரச்சனைகளும் தீர்வுகளும்.!!

Written by: Aruna Saravanan

சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவிகள் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் ஆகும். கடந்த ஆண்டு வெளியான கருவிகளில் வழங்கப்படாத பல புதிய அம்சங்கள் இந்த கருவிகளில் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இந்த கருவியின் சில அம்சங்கள் சார்ந்து பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்க தான் செய்கின்றன. அவற்றை எப்படி கையாள்வது என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இணைப்பு பிரச்சனை

வை-பை தொடர்பு பிரச்சனைக்கு செட்டிங்ஸ் சென்று பவர் சேவிங் ஆப்ஷன் அணைத்து வைக்க பட்டுள்ளதா என்று சரி பார்க்க வேண்டும். ப்ளூடூத் தொடர்பில் பிரச்சனை என்றால் கருவியுடன் வரும் கையேட்டை பயன்படுத்தி இதை பற்றி அறிந்து கொள்ளவும். பின்பு மீண்டும் செட்டிங் சென்று அனைத்தையும் செயல்படுத்தவும்.

கேமரா பிரச்சனை

சிலருக்கு எஸ்7 கேமராவை பற்றி பல பிரச்சனை உள்ளது. "Warning, Camera failed" என்ற வாசகம்தான் பிரச்சனையே. இதற்கு ரீஸ்டார்ட் செய்தால் தற்காலிகமாக பிரச்சனையை சரி செய்து விட முடியும்.

வேக் அப்

கேலக்ஸி எஸ்7இல் ஒரு பிரச்சனை போன் வேக் அப் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கின்றது என்பது. இதற்கு ஒரு எளிய தீர்வு போனினை ரீஸ்டார்ட் செய்யவும்.

பொத்தான்

சில நேரங்களில் இவ்வகை போனில் பவர் மற்றும் வால்யூம் பொத்தான்கள் செயல்படுவதில்லை என்பது அடுத்த பிரச்சனை. இதற்கு பவர் மற்றும் வால்யூம் பொத்தான்களை சில நிமிடங்களுக்கு அழுத்தி பிடித்து கொள்ளவும். பின்பு ரீஸ்டார்ட் செய்தால் போதும்.

பேட்டரி

குறைந்த நேரத்துக்கு பயன்படுத்தி இருந்தாலும் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவது அடுத்த பிரச்சனை. இதற்கு திரையின் பிரகாசத்தை குறைத்து விடவும், டிஸ்ப்ளேவை அணைத்து விடவும் பிறகு பின்புல தரவுகளின் பயன்பாட்டை குறைத்து விடவும்.

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How To Fix Common Problems Of Samsung Galaxy S7 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்