உங்களது வை-பை பாஸ்வேர்டினை பார்ப்பது எப்படி?

Written By:

மொபைல் போன் துவங்கி அதில் இருக்கும் ஆப் லாக் முதல் வை-பை வரை எல்லாவற்றிற்கும் பாஸ்வேர்டு மிக முக்கியமானதாக இருக்கின்றது. பல்வேறு அம்சங்களுக்கு பாஸ்வேர்டு பயன்படுத்தும் போது சில பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்வது சற்றே கடினமான விடயம் தான்.

அடிக்கடி பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளே மறந்து போகும் போது எப்பவோ பயன்படுத்தும் வை-பை பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்ள முடியமா?

உங்களது வை-பை பாஸ்வேர்டினை பார்ப்பது எப்படி?

உங்கள் வை-பையினை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க அதன் பாஸ்வேர்டுகளை குறைந்த பட்சம் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும்.

ஒரு வேலை மாற்றாமல் உங்களது வை-பை பாஸ்வேர்டினை மறந்து விட்டால் கவலை வேண்டாம். விண்டோஸ் கணினியில் உங்களது வை-பை பாஸ்வேர்டினை கண்டறிய முடியும். இதனை எப்படிச் செய்வது என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கண்ட்ரோல் பேனல்

முதலில் கணினியின் கண்ட்ரோல் பேனல் சென்று நெட்வர் மற்றும் ஷேரிங் சென்டர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனை டாஸ்க் பாரின் வயர்லெஸ் நெட்வரக் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தும் பெற முடியும்.

வை-பை

அடுத்து தற்சமயம் இணைக்கப்பட்டிருக்கும் உங்களது வை-பை இணைப்பின் பெயரின் மீது கிளிக் செய்ய வேண்டும்.

ப்ராப்பர்டீஸ்

வை-பை பெயரின் மீது கிளிக் செய்யும் போது தெரியும் திரையில் வயர்லெஸ் ப்ராப்பர்டீஸ் (Wireless Properties) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

செக்யூரிட்டி

வயர்லெஸ் ப்ராப்பர்டீஸ் ஆப்ஷனில் செக்யூரிட்டி (Security) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பாஸ்வேர்டு

செக்யூரிட்டி ஆப்ஷனை கிளிக் செய்ததும் தெரியும் திரையில் உங்களது பாஸ்வேர்டு தெரியும். இங்கு ஷோ பாஸ்வேர்டு (Show Password) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் வேலை முடிந்தது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to Find Your Wi-Fi Password on Windows Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்