தரவுகளை நிரந்தரமாக அழிக்க இதை தான் செய்ய வேண்டும்.!!

Written By:

ஸ்மார்ட்போன் கருவிகளை விற்பனை செய்யும் போது ஃபேக்ட்ரி ரீசெட் செய்தால் கருவியில் இருக்கும் அனைத்து தரவுகளும் அழிந்து விடும் என பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். ஆனால் இது உண்மையில்லை என உங்களுக்கு தெரியுமா.??

டிஜிட்டல் மற்றும் இண்டர்நெட் உலகில் ஒருமுறை பதிவேற்றம் செய்யப்பட்டால், அவற்றை நிரந்தரமாக அழிப்பது மிகவும் சவாலான காரியம் ஆகும். அனைத்து டிஜிட்டல் கருவிகளிலும் தரவுகளை அழிக்கும் போது அவை ஒரு ஃபோல்டரில் சேமித்து வைக்கப்படும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஃபேக்ட்ரி ரீசெட்

இதே நிலை தான் ஸ்மார்ட்போன்களை ரீசெட் செய்யும் போதும் ஏற்படும். ரீசெட் பட்டனை க்ளிக் செய்ததும் கருவியில் இருக்கும் தரவுகள் அனைத்தும் ரகசிய ஃபோல்டரில் சேமித்து வைக்கப்படுகின்றன.

மீட்பு

பொதுவாக ஃபேக்ட்ரி ரீசெட் மூலம் கருவியில் சேமிக்கப்படும் தரவுகளை சரியான வழிமுறைகளை கொண்டு மீட்க முடியும் என பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

பதற வேண்டாம், ஸ்மார்ட்போன்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் இருப்பின், கருவிகளை விற்பனை செய்யும் முன் கருவியயில் இருக்கும் தரவுககளை பாதுகாப்பது எப்படி??

என்க்ரிப்ட்

கருவியினை என்க்ரிப்ட் செய்வதால், அதனுள் இருக்கும் தகவல்களை நீங்கள் செட் செய்யும் கடவுச்சொல் (பாஸ்கோடு) இல்லாமல் பயன்படுத்த முடியாது. இன்று வெளியாவதில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ கொண்ட பெரும்பாலான கருவிகளில் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுகின்றது.

இயங்குதளம்

ஒரு வேலை ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அல்லது அதற்கும் பழைய இயங்குதளம் கொண்டிருந்தால் உங்களது கருவிகளில் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். ஒரு வேலை வழங்கப்பட்டிருந்தால் என்க்ரிப்ஷன் செட் செய்ய கருவியின் செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- என்க்ரிப்ட் போன் (Settings > Security > Encrypt phone) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பயன்பாடு

கருவியினை என்க்ரிப்ட் செய்தவுடன் கருவியினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்யும் முன் அதில் இருக்கும் தரவுகளை மீட்க முடியாமல் போகும்.

ஓவர் ரைட்

அதிக பாதுகாப்பு வேண்டுமெனில் ஃபேக்ட்ரி ரீசெட் மற்றும் என்க்ரிப்ட் செய்தவுடன் கருவியில் அதிகளவு தேவையற்ற தரவுகளை சேமிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது கருவியில் இருக்கும் முக்கிய தகவல்களை மீட்கவே முடியாத நிலை உண்டாகும்.

செட் அப்

கருவியினை ஓவர் ரைட் செய்ய, ஃபேக்ட்ரி ரீசெட் செய்து எவ்வித ஆன்லைன் கணக்குகளையும் லாக் இன் செய்ய கூடாது. கருவியை செட் அப் செய்து கேமரா ஆப் மூலம் அதிக தரம் கொண்ட வீடியோ எடுக்க வேண்டும். வீடியோ மூலம் மெமரி நிறைந்ததும் கருவியை மீண்டும் ஃபேக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to Erase smartphone Data permanently Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்