"தொல்லைப்பிடித்த" லைவ் வீடியோ நோட்டிபிகேஷனை நிறுத்துவது எப்படி.?

பேஸ்புக்கில் லைவ் வீடியோ, பெர்த்டே மற்றும் இதர எரிச்சலூட்டும் நோட்டிபிகேஷன்ஸ்களை நிறுத்துவது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

Written By:

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட், மிக எளிதாக ஒரு பெரிய அளவிலான நோட்டிபிகேஷன்கள் மிகுந்த ஒரு இடமாக மாறிக் கொண்டேபோகிறதா.? குறிப்பாக உங்கள் நண்பரின் லைவ் வீடியோ, இன்றைய பிறந்தநாள் யார் யாருக்கு போன்ற எரிச்சலூட்டும் நோட்டிபிகேஷன்களை நீங்கள் பெற விரும்பாவிட்டால் தமிழ் கிஸ்பாட் இங்கே வழங்கும் எளிய வழிமுறைகளை பின்பற்ற, லைவ் வீடியோ, பெர்த்டே மற்றும் இதர எரிச்சலூட்டும் நோட்டிபிகேஷன்ஸ்களை உங்களால் முடக்க முடியும்.

ஆண்ட்ராய்டு பேஸ்புக் ஆப்பில்..


1. பேஸ்புக் பயன்பாட்டை திறக்கவும்.
2. மேலே உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை டாப் செய்யவும்.
3. அக்கவுண்ட் செட்டிங்ஸ் டாப் செய்யவும்.
4. நோட்டிபிகேஷன்ஸ் தாப் செய்து உங்களுக்கு தேவையில்லாத அறிவிப்புகளை டிஸ்ஸேபிள் செய்து கொள்ளவும்.

ஐபோன் பேஸ்புக் ஆப்பில்..


1. பேஸ்புக் பயன்பாட்டை திறக்கவும்.
2. கீழ் வலது பக்கத்தில் உள்ள மோர் பொத்தானை தட்டவும்.
3. செட்டிங்ஸ் என்பதைத் தட்டவும் பின்னர் அக்கவுண்ட் செட்டிங்ஸ் டாப்ஸ் செய்யவும்.
4. அங்கு நோட்டிபிக்கேஷன்ஸ் தாப் செய்து, உங்களுக்கு தேவையில்லாத அறிவிப்புகளை டிஸ்ஸேபிள் செய்து கொள்ளவும்.

பிசி மூலம்..


1. வலைத்தளம் மூலமாக உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழையவும்.
2. கேம்ஸ் அண்ட் ஆப்ஸ் நோட்டிபிக்கேஷன்ஸ்-க்கு அடியில் எடிட் என்பதை கிளிக் செய்யவும்.
3. இப்போது டேர்ன் ஆப் என்பதை கிளிக் செய்யவும்.
4. சிலருக்கு தொடர்ந்து ஆப்ஸ் சார்ந்த அழைப்புகள் வருகிறது அது உங்களுக்கு தேவையற்றது என்றால், பிளாக் செட்டிங்ஸ் சென்று ஆப் பெயரை டைப் செய்து அந்த ஆப் இன்வைட்தனை முடக்கலாம்.
5. பெர்த்டே போன்ற நினைவூட்டல்களை முடக்க பேஸ்புக் நோட்டிபிகேஷன்ஸ் செட்டிங்ஸ் பக்கம் சென்று பெர்த்டே அருகில் உள்ள பட்டனை கிளிக் செய்து ஆப் என்பதை கிளிக் செய்யவும் (நீங்கள் இனியும் பெர்த்டே நினைவூட்டல்கள் பெறுவீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுடைய பெர்த்டே நினைவூட்டல்களை பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
6.
நீங்கள் அதே பக்கத்தில் பிற வகையான அறிவிப்புகளை டிஸ்ஸேபிள் செய்ய நெக்ஸ்ட் பொத்தானை கிளிக் செய்து நிகழ்த்திக் கொள்ளலாம்.

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ (ஆண்ட்ராய்டு) ஒலிக்க செய்வது எப்படி என்ற டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to Disable Birthday, Live Video, and Other Annoying Notifications on Facebook. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்