ஐபோனில் மொபைல் டேட்டா சட்டுனு காலியாகுதா, குறைக்க இதை செய்யுங்க போதும்.!

Written By:

ஐபோன் விற்கும் விலைக்கு அதனினை வாங்குவதே பெரிய விடயம். நிலமை இப்படி இருக்க அதில் மொபைல் டேட்டா வேறு போட வேண்டுமா என்று நினைப்பவரா நீங்கள். என்ன நினைத்தாலும் இண்டர்நெட் இல்லாமல் ஐபோன் பயன்படுத்துவது மிகவும் கடினமான காரியம் ஆகும். என்ன செய்வது வேறு வழியில்லாமல் குறைந்த அளவு டேட்டா ரீசார்ஜ் செய்துள்ளீர்களா??

ஐபோனிற்கு நீங்கள் செய்த குறைந்த டேட்டா ரீசார்ஜினை முழுமையாகப் பயன்படுத்த சில எளிய வழிமுறைகளைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம். இன்று எல்லா இடத்திலும் வை-பை கிடைக்கும் நிலையில் போனில் இருக்கும் குறைந்த அளவு மொபைல் டேட்டாவினை சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஐகிளவுட்:

முதலில் ஐகிளவுட் சேவையில் செல்லுலார் டேட்டாவினை ஆஃப் செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் -- ஐகிளவுட் -- ஐகிளவுட் டிரைவ் -- செல்லுலார் டேட்டாவினை ஆஃப் செய்ய வேண்டும்.

ஆட்டோமேடிக் டவுன்லோடு:

அடுத்து செல்லுலார் டேட்டாவில் ஆட்டோமேடிக் டவுன்லோடு ஆப்ஷனினை ஆஃப் செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் -- ஐடியூன்ஸ் மற்றும் ஆப் ஸ்டோர் சென்று செல்லுலார் டேட்டாவினை பயன்படுத்த கோரும் ஆப்ஷனினை ஆஃப் செய்ய வேண்டும்.

வை-பை அசிஸ்ட்:

பின் வை-பை அசிஸ்ட் ஆப்ஷனினை ஆஃப் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- செல்லுலார் -- வை-பை அசிஸ்ட் ஆப்ஷனினை ஆஃப் செய்ய வேண்டும்.

ஆப்ஸ்:

இனி ஐபோனில் தேவையில்லா ஆப்ஸ்களுக்கு செல்லுலார் டேட்டாவினை ஆஃப் செய்ய வேண்டும். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- செல்லுலார் -- தேவையற்ற ஆப்ஸ்களை டிசேபிள் செய்ய வேண்டும்.

பேக்கிரவுண்டு ஆப் ரீஃப்ரெஷ்:

ஐபோனின் பேக்கிரவுண்டு ஆப் ரீஃப்ரெஷ் ஆப்ஷனினை செயல்படுத்த வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- ஜெனரல் -- பேக்கிரவுண்டு ஆப் ரீஃபிரெஷ் சென்று தேவையற்ற ஆப்ஸ்ளை தேர்வு செய்யலாம் அல்லது அனைத்து ஆப்ஸ்களையும் ஒரே கிளிக் மூலம் ஆஃப் செய்ய முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to Cut Down Mobile Data usage in iPhone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்