உங்கள் பிஎப் இருப்புத்தொகையை ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

மிக எளிமையாக உங்கள் பிஎப் இருப்புத்தொகையை ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

By Prakash
|

அனைத்து அலுவலகத்திலும் பிஎப் இருப்புத்தொகைப் பிடிக்கப்படுகிறது. இவை ஒவ்வொரு சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்டதொகையை உங்கள் அலுவலகம் உங்கள் நலத்திட்டத்திற்க்காக ஒதிக்கிவைக்கும். வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது.

பிஎப் பொருத்தமாட்டில் உங்கள் இருப்புத்தொகையை ஆன்லைனில் மிக எளிமையாக செக் செய்யமுடியும். மேலும் உங்கள் பிஎப் கணக்கில் குறிப்பாக எவ்வளவு சேமிப்பு இருப்புத்தொகை இருக்கிறது போன்றவற்றை எளிமையாக ஆன்லைனில் தற்போது எளிமையாக அறியமுடியும்.

பிஎப் இருப்புத்தொகையை ஆன்லைனில்  செக் செய்வது எப்படி?

பிஎப் இருப்புத்தொகையை ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

முதலில் பிஎப் கணக்கு எண் சரியாக குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.
உங்கள் பிஎப் கணக்கைப் பற்றிய தகவலைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான தகவல்.

வழிமுறை #01

வழிமுறை #01

*ஆன்லைன் சென்று http://www.epfindia.com/site_en/KYEPFB.php இந்த வலைப்பக்கத்தின் கீழ் நுழையவேண்டும்.

*உங்கள் பிஎப் கணக்கு பராமரிக்கப்படும் மாநில அலுவலகத்தை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

*மாநிலத்தை தேர்ந்தெடுத்தவுடன், அந்த மாநிலத்துடன் தொடர்புடைய நகர அலுவலகங்களின் பட்டியல் கீழே பட்டியலிடப்படும்.

*பட்டியலில் இருந்து உங்கள் நகர குறிப்பிட்ட பிஎப் அலுவலகம் தேர்வு செய்யவேண்டும்.

*எடுத்துக்காட்டாக, உங்கள் மாநில அலுவலகம் கர்நாடகா மற்றும் உள்ளூர் அலுவலகம் பெங்களூரில் இருந்தால், பெங்களூரை நகரமாக தேர்வு செய்யவேண்டும்.

வழிமுறை #03

வழிமுறை #03

*தேர்வுசெய்தபின் அவற்றில் பிஎப் கணக்குஎண், பெயர்,மொபைல்எண் அதில் கொடுக்கப்பட்ட அனைத்துதகவல்களையும் விண்ணப்பங்களில் பூர்த்திசெய்யவேண்டும்.

*அனைத்து தகவல்களையும் சமர்ப்பித்தபின் உங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பபடும் மொபைல் எண் மூலம் அனைத்துதகவல்களையும் அறியமுடியும்.

 யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்:

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்:

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN ) ஊழியர் சேமலாப நிதி அமைப்பினால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. யுஏஎன் (UAN)இணையதளத்தில் உங்கள் பிஎப் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்து யுஏஎன் எண்ணை உருவாக்க வேண்டும். பின்னர் அதைப் பயன்படுத்தி உள்நுழைந்து சந்தாதார்கள் பிஎப் பங்களிப்பு மற்றும் நடப்பு இருப்புத் தொகை போன்றவற்றைக் காணலாம்.

யுஏஎன்(UAN ) வழிமுறை #01

யுஏஎன்(UAN ) வழிமுறை #01

*வலைதளத்தில் http://uanmembers.epfoservices.in/ இதன் மூலம் நுலையவேண்டும்.

*பின்னர் உங்கள் யுஏஎன் கணக்கு எண் அவற்றில் தெரிவிக்கவேண்டும்.

வழிமுறை #02

வழிமுறை #02

*எஸ்எம்எஸ் பெறும் உங்கள் மொபைல் எண்களை அதன்பக்கத்தில் குறிப்பிடவேண்டும.

*உங்கள் பிஎப் கணக்கு பராமரிக்கப்படும் மாநில அலுவலகத்தை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

*மாநிலத்தை தேர்ந்தெடுத்தவுடன், அந்த மாநிலத்துடன் தொடர்புடைய நகர அலுவலகங்களின் பட்டியல் கீழே பட்டியலிடப்படும்.

*பட்டியலில் இருந்து உங்கள் நகர குறிப்பிட்ட பிஎப் அலுவலகம் தேர்வு செய்யவேண்டும்.

*எடுத்துக்காட்டாக, உங்கள் மாநில அலுவலகம் கர்நாடகா மற்றும் உள்ளூர் அலுவலகம் பெங்களூரில் இருந்தால், பெங்களூரை நகரமாக தேர்வு செய்யவேண்டும்.

வழிமுறை #04

வழிமுறை #04

*அதன்பின் கணினி மூலம் கேட்கப்படும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்.

*கடைசியாக நீங்கள் வழங்கிய மொபைல் எண்ணில் பிஎப் இருப்பு விபரங்களைப் பெறுவீர்கள்.

எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டுகால் மூலம் தகவல்:

எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டுகால் மூலம் தகவல்:

*உங்களுக்கு ஆன்லைன் இணைப்பு இல்லாத நேரத்தில் எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டுகால் மூலம் தகவலைப்பெற முடியும்.

*யுஏஎன் கணக்கு எண் உங்கள் மொபைல் நம்பருடன் பொருந்தியிருக்க வேண்டும்.

இந்த நம்பருக்கு;

இந்த நம்பருக்கு;

*உங்கள் மொபைல் மூலம் 011-22901406 இந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தால் உடனே பிஎப் தகவல் கிடைக்கும். மேலும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பிவைக்கப்படும்.

*தற்போது யுஏஎன் சமநிலையை அறிந்து கொள்ள ஆதார்அட்டை மற்றும் பான்அட்டை கண்டிப்பாக தேவைப்படும்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to Check Your EPF Balance Online ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X