வாட்ஸ் அப்-இல் அனுப்பிய, பெற்ற மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Siva
|

வாட்ஸ் அப் என்பது தற்போது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் தினமும் பல நபர்களுக்கு மெசேஜ் அனுப்புவதும், பல நண்பர்களிடம் இருந்து மெசேஜ் பெறுவதுமாக இருக்கின்றோம்.

வாட்ஸ் அப்-இல் அனுப்பிய, பெற்ற மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள

ஆனால் எத்தனை வாட்ஸ் அப் மெசேஜ் நான் அனுப்பியுள்ளோம், அல்லது எத்தனை மெசேஜ் பெற்றுளோம் என்பதை நாம் அறிய முடியுமா? ஐஓஎஸ் போன்களில் இந்த வசதி உள்ளது. எனவே எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் மெசேஜ்களை நீங்கள் கையால்தான் எண்ண வேண்டும்.

யூட்யூப் வீடியோக்கள் லோடு ஆகாமல் பார்க்க ஒரு 'ட்ரிக்' இருக்கு.!!

ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் உங்களுக்காக நாங்கள் ஒருசில டெக்னிக்கை வாட்ஸ் அப் மெசேஜின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள சொல்லி தருகிறோம்.

வாட்ஸ் அப்-இல் அனுப்பிய, பெற்ற மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள

ஐஒஎஸ் போனில் வாட்ஸ் அப் மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வது எப்படி? என்பதை தற்போது பார்ப்போமா?

உங்களின் 2017 பட்ஜெட்டில் நிச்சயம் இடம் பிடிக்கும் டாப் சாம்சங் கருவிகள்.!

முதலில் வாட்ஸ் அப் அப்ளிகேசனை லாஞ்ச் செய்து பின்னர் அதன் செட்டிங்கை டேப் செய்யுங்கள். பின்னர் அதில் உள்ள டேப் அக்கவுண்ட் என்ற ஆப்சனை க்ளிக் செய்து பின்னர் ஸ்டோரேஜ் யூசேஜ் என்பதையும் க்ளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் மெசேஜின் எண்ணிக்கையை பொருத்து ஒருசில நிமிடங்கள் லோட் ஆகும்.

வாட்ஸ் அப்-இல் அனுப்பிய, பெற்ற மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள

தற்போது மொத்தம் எத்தனை மெசேஜ்கள் வாட்ஸ் அப்பில் உள்ளது என்பதையும் ஒவ்வொரு நண்பரிடம் இருந்து எத்தனை மெசேஜ்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தற்போது அறியலாம்,.

லீஈகோ : புதியதொரு ஆன்லைன் சாதனை.!

இதன் பின்னர் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நண்பரின் பெயரை அழுத்தி அவரிடம் இருந்து எத்தனை மெசேஜ்கள் வந்துள்ளன, அவற்றில் எத்தனை புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்டுக்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் நீங்கள் எவ்வளவு யூசேஜ் பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை அறிய கீழே உள்ள சைஸ் என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் பயன்படுத்திய அளவை அறிந்து கொள்ளலாம்

ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வது எப்படி? என்பதை பார்ப்போம்

வாட்ஸ் அப்-இல் அனுப்பிய, பெற்ற மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள

1. வாட்ஸ் அப் அப்ளிகேசனை லாஞ்ச் செய்து பின்னர் எந்த நண்பரின் மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்

2.அதன் பின்னர் options >more >Email chat செல்லவும்

3. பின்னர் உங்களுக்கு இரண்டு விதமான ஆப்ஷன்கள் தோன்றும். அதில் Attach without Media என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்

வாட்ஸ் அப்-இல் அனுப்பிய, பெற்ற மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள

4. அதில் உங்கள் இமெயில் ஐடியை பதிவு செய்யுங்கள். இந்த இமெயிலுக்கு உங்களுடைய சேட் லிஸ் மொத்தமும் டெக்ஸ் ஃபார்மேட்டில் வரும்

5.. அதன் பின்னர் உங்களுடைய மெயில் அக்கவுண்டுக்கு சென்று சேட்டை டவுன்லோடு செய்யவும்,

6. பின்னர் அதை அப்படியே காப்பி செய்து நோட்பேட்++ல் பேஸ்ட் செய்ய வேண்டும்

7. தற்போது நீங்கள் குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பியவரின் பெயரும், அவர் உங்களுக்கு அனுப்பிய மெசேஜ்களின் எண்ணிக்கையும் தெரிய வரும். இதன் மூலம் நீங்கள் பெற்ற, அனுப்பிய மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Using WhatsApp frequently? You can now check how many messages you have exchanged with a particular contact or group.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X