வாட்ஸ் அப் சேட்டிங் உரையாடல்களை டெக்ஸ்ட் ஃபைலாக பாதுகாப்பது எப்படி?

Written By:

வாட்ஸ் அப் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு மொபைல் போன் பயனாளிகளுக்கும் இன்றியமையாத ஒன்றாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. சாப்பாடு இல்லாமல் இருப்பவர்கள் கூட வாட்ஸ் அப் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறுவதை நாம் பார்த்துதான் வருகிறோம்.

வாட்ஸ் அப் சேட்டிங் உரையாடல்களை டெக்ஸ்ட் ஃபைலாக பாதுகாப்பது எப்படி?

நம்முடைய அன்புக்குரியவர்களிடம் நாம் வாட்ஸ் அப் மூலம் சேட் செய்ய ஆரம்பித்தால் நமக்கு நேரம் போவதே தெரியாது. ஒருசிலரிடம் சேட் செய்த விஷயங்களை நாம் சேமித்து வைத்து அவர்கள் ஞாபகம் வரும்போதெல்லாம் சேட் செய்த விஷயங்களை மீண்டும் படித்து மகிழ்வோம். எனவே இந்த சேட் விஷயங்களை சேவ் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்

வாட்ஸ்ஆப் வீடியோ கால் செஞ்சீங்களே, அதுல இதெல்லாம் செஞ்சீங்களா.?

பொதுவாக வாட்ஸ் அப் இரண்டு விதங்களில் சேட் விஷயங்களை சேவ் செய்ய அனுமதித்துள்ளது. ஒன்று கூகுள் டிரைவ் அல்லது ஐக்ளெளட் மூலம் சேவ் செய்து கொள்ளலாம். இன்னொன்று டெக்ஸ்ட் ஃபைல் மூலம் சேவ் செய்து கொள்ளலாம். தற்போது டெக்ஸ்ட் மூலம் எப்படி நமது சேட்டிங்கை சேவ் செய்வது என்பதை பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்டெப் 1: சேவ் செய்ய வேண்டிய சேட்டிங் பக்கத்தை ஓபன் செய்ய வேண்டும்

நாம் எந்த சேட்டிங்கை சேவ் செய்ய வேண்டுமோ முதலில் அந்த சேட்டிங் பக்கத்தை ஓப்பன் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2: மூன்று டாட் லைனை க்ளிக் செய்ய வேண்டும்.

சேவ் செய்ய வேண்டிய பக்கத்தை ஓப்பன் செய்த பின்னர் ஸ்க்ரீனில் உள்ள வலது மேல் புறத்தில் மூன்று டாட் கொண்ட லைனை க்ளிக் செய்ய வேண்டும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 3. 'மோர்'ஐ க்ளிக் செய்ய வேண்டும்:

மூன்று டாட்டட் லைனை க்ளிக் செய்தவுடன் வரும் டிராப் டவுனில் 'மோர்'( More) என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் இமெயில் என்ற சேட் ஆப்சன் வரும்.

ஸ்டெப் 4:

பின்னர் உங்களுக்கு திரையில் ஒரு பாப்-அப் தோன்றும். அதில் உங்களுக்கு இரண்டுவிதமான மீடியா தோன்றும். ஒன்று Without Media மற்றொன்று Attach Media. இதில் நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை செலக்ட் செய்ய வேண்டும்

ஸ்டெப் 5: உங்கள் சேட் விஷயங்களை கூகுள் அக்கவுண்டுக்கு அனுப்புங்கள்

மேற்கண்ட வழிமுறைகளை கவனமாக செய்தவுடன் நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்டில் இருந்து இமெயிலுக்கு அனுப்பலாம். நீங்கள் ஜிமெயில் மட்டுமின்றி எந்த மெயில் ஐடி வைத்திருந்தாலும் இந்த சேட்டிங் டெக்ஸ்ட்டை அனுப்பிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இமெயிலில் உங்கள் சேட் டெக்ஸ்ட்டை டவுன்லோடு செய்யலாம். பின்னர் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பேக்-அப்பை திறந்து படித்து மகிழலாம்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Here's how you can backup and restore your WhatsApp chat conversations in a text file.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்