பழைய மெஸேஜ்களை தானாக டெலிட் செய்வது எப்படி.? (ஐபோன் அண்ட்ராய்டு)

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் கருவிகளில் பழைய மெஸேஜ்களை ஆட்டோமெட்டிக்காக டெலிட் செய்வது எப்படிஎன்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

Written By:

உங்கள் கருவியில் மெஸேஜ் ஆப் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா.? மெஸேஜ்களை ஸ்க்ரால் டவுன் அலல்து ஸ்கார்ல அப் செய்கையில் மேலும் கீழும் போக திணறுகிறதா.? அல்லது உங்கள் போன் பழைய மெஸேஜ்களால் நிரம்பி விட்டதா.?

பழைய மெஸேஜ்களை தானாக டெலிட் செய்வது எப்படி.? (ஐபோன் அண்ட்ராய்டு)

இதற்கெல்லாம் உங்களின் ஒரே பதில் 'ஆம்" என்றால் உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் கருவிகளில் உள்ள பழைய மெஸேஜ்களை ஆட்டோமெட்டிக்காக டெலிட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தான் தமிழ் கிஸ்பாட் உங்களுக்கு வழங்கும் அறிவுரை மற்றும் உடன் அதை நிகழ்த்துவது எப்படி என்ற வழிமுறைகளும்.!

ஐபோன் கருவியில்..

1. செட்டிங்ஸ் > மெஸேஜஸ்
2. ஸ்க்ரால் டவுன் செய்து மெஸேஜ் ஹிஸ்டரி செல்லவும்
3. கீப் மெசேஜஸ் ஆப்ஷனை டாப் செய்யவும்
4. 30 நாட்கள் அல்லது 1 வருடம் என விருப்பமான ஆப்ஷனை தேர்வு செய்யவும். இது உங்கள் விருப்பத்தின் கீழ் வரும் மெஸேஜ்களை டெலிட் செய்யும்.

ஆண்ட்ராய்டு கருவிகளில் ஹாங்அவுட் என்ற ஆப் மூலமாக நீங்கள் இதை நிகழ்த்த..

1. ஹாங்அவுட் - டீபால்ட் மெஸேஜிங் ஆப்தனை திறக்கவும்.
2. மேல்-இடது பக்கத்தில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை டாப் செய்யவும்.
3. செட்டிங்ஸ் டாப் செய்யவும்.
4. எஸ்எம்எஸ் டாப் செய்யவும்.
5. எஸ் எம் எஸ் டிஸ்சேபிள் டாப் செய்து ஓகே தேர்வு செய்யவும்.

ஹாங்அவுட் ஆப் மூலம் ஆட்டோமெட்டிக்காக மெஸேஜ்களை டெலிட் செய்ய..


1. அட்வான்ஸ்டு செக்சனுக்கு ஸ்க்ரோல் டவுன் செய்து செல்லவும்.
2. டெலிட் ஓல்ட் மெஸேஜஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும் (நினைவகம் குறைவாக இருக்கும் போது இது உங்கள் தொலைபேசியில் உள்ள பழைய உரை செய்திகளை நீக்கும்)

ஹாங்அவுட் ஆப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
How to Automatically Delete Old Text Messages on iPhone, Android. Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்