எல்லா ஆண்ட்ராய்டு கருவிகளுக்கும் சைகை வசதி வழங்க முடியும்.!!

By Meganathan
|

ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் அதாவது சைகை மூலம் கருவியை இயக்குவது. இன்று ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாகும் பல்வேறு கருவிகளிலும் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இதோடு டேப்ளெட், கணினி உள்ளிட்ட கருவிகளிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகின்றது.

ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதிகள் தற்சமயம் வரை சற்றே விலை உயர்ந்த கருவிகளில் மட்டும் தான் வழங்கப்படுகின்றது என்ற கவலை பெரும்பாலானோருக்கும் இருக்கின்றது.

ஆனால் அனைத்து வித ஆண்ட்ராய்டு கருவிகளிலும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா.??

செயலி

செயலி

ஆண்ட்ராய்டு கருவிகளில் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வழங்க பல்வேறு செயலிகள் முயற்சித்தன, இந்தச் சேவையை வழங்கும் பிரத்தியேக செயலி ஏதும் கூகுள் நிறுவனத்திடமே இல்லை.

நோவா லான்ச்சர்

நோவா லான்ச்சர்

ஆண்ட்ராய்டு கருவிகளில் ஜெஸ்ட்யூர் சப்போர்ட் பெற எளிய வழி அதில் லான்ச்சர் இன்ஸ்டால் செய்வது தான். பெரும்பாலான லான்ச்சர்களில் ஜெஸ்ட்யூர் சப்போர்ட் பெற முடியும். இதில் எளிய வகை லான்ச்சர் தான் நோவா சிறந்த செயலி எனலாம்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

இதற்கு முதலில் நோவா லான்ச்சர் பிரைம் எனும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வாங்கி அதனினை இன்ஸ்டால் செய்ய வேண்டும். செயலியை வாங்க இங்கு கிளிக் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

செயலியை வாங்கியதும் கருவியில் இன்ஸ்டால் செய்து தேவையான ஷார்ட்கட்களை செட் செய்தால் ஜெஸ்ட்யூர் ஆப்ஷனினை பயன்படுத்தத் துவங்கலாம்.

குவிகிஃபை

குவிகிஃபை

இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து தேவையான சைகைகளை செட் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். உடனே டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

செட்டப்

செட்டப்

முதலில் "+" பட்டனை கிளிக் செய்து ஜெஸ்ட்யூர் டைப் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனினை செட் செய்ததும் ஹோம் ஸ்கிரீன் சென்று மிதக்கும் ஐகானினை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் நீங்கள் செட் செய்த ஜெஸ்ட்யூர் பயன்படுத்தி ஆப்ஸ்களை இயக்க முடியும்.

கூகுள் ஜெஸ்ட்யூர் சர்ச்

கூகுள் ஜெஸ்ட்யூர் சர்ச்

இந்த ஆப் மூலம் போனில் இருக்கும் குறிப்பிட்ட தரவுகளைத் தேடுவது எளிமையாக இருக்கும். இதில் எல்லா வித ஃபைல்களும் அடங்கும். மேலும் இந்தச் செயலியை பயன்படுத்த அதனினை இன்ஸ்டால் செய்தாலே போதுமானது.
செயலியை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
How To Add Gesture Controls to Any Android Device Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X