உடனடியாக பேடிஎம் க்யூஆர் குறியீடு உருவாக்குவது எப்படி.?

பேடிஎம் க்யூஆர் குறியீடு பெறுவது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

Written By:

இந்தியாவின் சமீபத்திய பணத்தின் மதிப்பைக் குறைத்தலின் (ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் மீதான தடை ) காரணமாக பேடிஎம் வெறும் ஆறு நாட்களில் ஆஃப்லைன் ஸ்டோர் பரிவர்த்தனைகளில் ஒரு மகத்தான வளர்ச்சியை கண்டது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக பேடிஎம் க்யூஆர் குறியீடு உருவாக்குவது எப்படி.?

இப்படியான நிலையில் நீங்கள் ஒரு வணிக உரிமையாளர் மற்றும் நீங்கள் உங்கள் கடையில் ஒரு பேடிஎம் க்யூஆர் (QR) குறியீடு உருவாக்க வேண்டும் என்றால் தமிழ் கிஸ்பாட் வழங்கும் எளிய வழிமுறைகளை பின்பற்றி அதை நிகழ்த்திக்கொள்ளவும். இதோ, பணம் சேகரிக்கும் உங்கள் சொந்த பேடிஎம் க்யூஆர் குறியீட்டை சில நிமிடங்களில் உருவாக்குவது எப்படி என்பதற்கான வழிமுறைகள்.?

பேடிஎம் க்யூஆர் குறியீட்டை சில நிமிடங்களில் உருவாக்குவது எப்படி.?

1. அளிக்கப்பட்டுள்ள இணைப்பை உங்களின் ப்ரவுஸரின் மூலம் திறக்கவும் http://paywithpaytm.com/contactus/in-store-payments/
2. அல்லது நீங்கள் பேடிஎம் க்யூஆர் குறியீடு ஜெனரேட்டர் பக்கத்தினுள் நுழையலாம்.
3. இப்பொது நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி பூர்த்தி செய்யப்பட்ட ஒரு படிவத்தை பார்ப்பீர்கள். அத்துடன் அதை இந்தி வடிவத்திலும் காண ஒரு வழி இருக்கிறது.
4. இப்போது உங்களின் கோரிக்கைகளுக்கான விவரங்களை பூர்த்தி செய்யவும்
5. முதல் பெயர், கடைசி பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, வர்த்தகம் / அவுட்லெட் பெயர், பின்கோடு, நகரம், வணிக முகவரி முதலியன உங்களின் அனைத்து தேவையான விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
6. உங்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறிய தேர்வை வெற்றிகரமாக முடிக்கவும்.
7. பின்பு "சப்மிட்" என்ற பொத்தானை கிளிக் செய்யவும், அவ்வளவுதான்.!

உடனடியாக பேமண்ட் பெற..

1. உங்கள் ஸ்மார்ட்போன் பேடிஎம் பயன்பாட்டை பதிவிறக்கி உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்யவும்
2. உங்கள் க்யூஆர் குறியீடு உருவாக்கப்பட்டபின்பு அதை பிரிண்ட் செய்து உங்கள் கவுண்டரில் ஒட்டவும்.
3. பின்னர் உங்கள் வாடிக்கையாளர்களை அந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தேவையான பணத்தை அனுப்ப சொல்லவும்.

தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Here's How You Can Get Your Paytm QR Code Instantly. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்