இண்டர்நெட்டில் 'இதுவும்' போலியாக இருக்கலாம், உஷார்.!

இண்டர்நெட் தன்னுள் பல போலிகளை மறைத்து வைத்துள்ளது. ஆனால், அது வழங்கும் தகவல்களிலும் போலிகள் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.?

|

ஒரு விடயம் பற்றிய சக மனிதர்களின் கூற்றை நம்ப முடியாமல் தான், அதன் உண்மை நிலையை அறிய நாம் இண்டர்நெட்டை அணுகுகிறோம். ஆனால், இண்டர்நெட் மனிதர்களை விட அதிக அளவிலான பொய்களை தன்னுள் கொண்டுள்ளது என்பது தான் உண்மை. அதாவது போலி செய்திகள்/ தகவல்கள்.!

அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டு சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவைகள் வெளியிட்ட பெருவாரியான போலி செய்திகள் தான் டிரம்ப் வெற்றி பெற வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியதுதான். பல வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் டிரம்ப்பிற்கு ஆதரவளிக்கும் பல்வேறு செய்திகளை வெளியிட அது அவரின் வெற்றிக்கு பின்னால் ஒருபெரும் பங்கை பெற்றது என்பது தான் குற்றச்சாட்டு.

எனினும், பேஸ்புக் மற்றும் கூகுள் இந்த பழியை மறுத்தது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் போலி செய்திகளை பில்டர் செய்யும் பணியில் பேஸ்புக்கும், கூகிள் அதன் ஆன்லைன் விளம்பர சேவையான ஆட்சென்ஸ் பயன்படுத்தி இணையத்தில் உள்ள போலி செய்திகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

கூகுள், பேஸ்புக், ட்விட்டர், மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் அதன் ஆன்லைன் செய்தி வாசகர்களுக்கு போலி செய்திகள் மற்றும் தகவல்கள் செல்லாமல் இருக்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது ஒருபக்கம் இருக்கட்டும் நீங்களாகவே ஒரு செய்தி அல்லது தகவல் ஆனது போலி என்பதை எளிமையாக கண்டறிய முடியும், அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள்

பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள்

போலி செய்திகளை வெளியிடும் பெரும்பாலான இணையத்தளங்கள் முகவரி Lo (அ) .Co.com (அ) Com.co என்று தான் முடிவடையும். முறையாக பதிவு செய்யப்பட்ட வலைத்தளத்தின் யூஆர்எல் .காம் அல்லது .இன் என்றாகத் தான் இருக்கும்.

பைலைன்

பைலைன்

பொதுவாக கட்டுரையை எழுதிய ஆசிரியரின் பெயர் ஆனது பைலைன் அல்லது ஆத்தர் நேம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மாறாக எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை எனில் அது போலியாக இருக்க வாய்ப்புண்டு

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரே ஆசிரியரால்

ஒரே ஆசிரியரால்

மாறாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் பெரும்பாலான அல்லது அனைத்து கட்டுரைகளும் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் கண்டால் அது போலி செய்திகளுக்கான வலைத்தளமாக இருக்க வாய்ப்புண்டு.

சோதித்து பார்ப்பது கட்டாயம்

சோதித்து பார்ப்பது கட்டாயம்

எந்தவொரு வலைத்தளம் சென்றும் தகவல்களை அறிந்து கொள்வதென்பது அவரவர் விருப்பம் ஆனால் நீங்கள் பெறும் தகவல்கள் ஆனது உண்மையானதா என்பதை பிற தளங்களில் சோதித்து பார்ப்பது கட்டாயமாகும், இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

போலி ஆப்ஸ்கள் : உஷாராக கண்டுபிடிப்பது எப்படி.

Best Mobiles in India

English summary
Here's How to Spot "Fake News" on the Internet. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X