பேருந்து டிக்கெட் பெற இனி ரொக்கம் தேவையில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு உதவு ரிலையன்ஸ் ஜியோ

Written By:

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்துள்ளதால் பொதுமக்களிடம் புழங்கி வரும் பணத்தின் அளவு அதிகளவு குறைந்துவிட்டது. வங்கியில் மணிக்கணக்கில் காத்திருந்து வாங்கி வரும் ரூ.2000 நோட்டை எப்படி மாற்றுவது என்பது அதைவிட சிரமமாக உள்ளது.

பேருந்து டிக்கெட் பெற இனி ரொக்கம் தேவையில்லை.

இந்நிலையில் பேருந்து டிக்கெட் புக் செய்ய உங்களிடம் பணம் இல்லை என்றாலோ அல்லது சில்லரை இல்லாமல் தவித்தாலோ உங்களுக்கு உதவ வருகிறது ரிலையன்ஸ் ஜியோ.

ஐபோன் வாங்க ரூ.23,000 சலுகை தராங்க பாஸ்..

பேருந்து டிக்கெட்டுக்களை ரிலையன்ஸ் ஜியோ 'டிராவல்யாரி'( Travelyaari) என்ற ஆப்ஸ்-உடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் உங்கள் பர்ஸில் சுத்தமாக பணம் இல்லாவிட்டாலும் இதன் மூலம் நீங்கள் வேறு அதிக கட்டணமின்றி பேடிஎம், ஃப்ரீ சார்ஜ், ஏர்டெல் மணி, ஜியோ மணி ஆகியவை மூலம் உங்களுக்கு தேவையான பேருந்து டிக்கெட்டுக்களை புக் செய்து கொள்ளலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை

அவசர வேலையாக வெளியூர் செல்வதாக இருந்தால் பேருந்து டிக்கெட்டுக்கள் புக் செய்ய நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதிலும் விசேஷ நாட்களில் சொல்லவே வேண்டாம்.

அதுமட்டுமின்றி மணிக்கணக்கில் வரிசையில் நின்றாலும் சரியான சில்லரை இல்லாவிட்டாலும் சிக்கல் ஏற்படும். ஆனால் இந்த பிரச்சனைகள் எஹ்டுவும் இன்றி நீங்கள் Paytm அல்லது Jiomoney மூலம் எளிதான பிராசஸ் மூலம் உங்களுக்கு தேவையான டிக்கெட்டுக்களை புக் செய்து கொள்ளலாம்

 

ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒப்பந்தம் செய்துள்ள Travelyaari

Travelyaari என்ற ஆப்ஸ் உடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் உங்களுக்கு தேவையான டிராவல் டிக்கெட்டுக்களை பணமாக கொடுப்பதை தவிர்த்து ஆஃப்லைனிலும் புக் செய்து கொள்ளலாம். இந்த ஆப் பயன்படுத்துவதற்கும் மிக மிக எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Travelyaari உடன் ஒப்பந்தம் செய்துள்ள Paytm

ரிலையன்ஸ் நிறுவனம் Travelyaari உடன் ஒப்பந்தம் செய்துள்ளதை போல Travelyaari ஆப் நிறுவனம் Paytm உடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு உங்களது பயணம் தற்போது மிக எளிதாகிறது. டிக்கெட் கிடைக்குமா? என்ற கவலையே இனி ஏற்பட வாய்ப்பு இல்லை

சுகமான பயண அனுபவம் பெற வேண்டுமா?

பயணம் என்பதே ஒரு சுகமான அனுபவம் என்பதால் பயண டிக்கெட் எடுப்பதும் ஒரு எளிய வகையாக மாற்ற வேண்டும் என்பதற்காக யோசித்து வழங்கப்பட்டதுதான் இந்த ஐடியா. ரிலையன்ஸ், Travelyaari மற்றும் Paytm ஆகியவற்றின் மூலம் மிக எளிதாக டிஜிட்டலில் பண பரிவர்த்தனை செய்து டிக்கெட்டுகளை எளிதில் பெறும் வகையில் இருப்பதால் தற்போது பயணம் மட்டுமின்றி டிக்கெட் பெறுவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்போம்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய பணத்தை மட்டும் நம்பி இருக்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனையை உபயோகித்தால் பாரத பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவு விரைவில் நிறைவேறும். அந்த வகையில் டிஜிட்டல் மூலம் நமது டிக்கெட்டுக்களை மேற்கண்ட வழியில் பெற்று பின்னர் அதற்குரிய பணத்தை அதில் குறிப்பிட்டுள்ள பல வழிகளில் மொபைல் மூலமே நாம் செலுத்தி கொள்ளலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Here's how you can book tickets from offline counters without cash.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்