கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து வாங்கிய ஆப்களுக்கு பணம் திரும்ப பெறுவது எப்படி?

By Siva
|

கூகுள் ப்ளே ஸ்டோரில் எண்ணற்ற இலவச ஆப்ஸ்கள் இருந்தாலும் ஒருசில ஆப்ஸ்களை நீங்கள் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும்.

ப்ளே ஸ்டோரில் வாங்கிய ஆப்களுக்கு பணம் திரும்ப பெறுவதெப்படி?

ஒருவேளை நீங்கள் பணம் கொடுத்து வாங்கிய ஒரு ஆப், உங்களுக்கு திருப்தி தரவில்லை என்றால் உங்கள் பணம் வேஸ்ட் என்றுதானே நீங்கள் நினைப்பீர்கள். அதுதான். இல்லை. அது எப்படி என்பதை பார்ப்போம்.

அமேசான் சிறப்பு விற்பனை : எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்!

இலவச ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன்பே அதன் ரெவ்யூக்களை படித்து இன்ஸ்டால் செய்யும்போது பணம் கொடுத்து வாங்கும் ஆப்-ஐ எப்படி கவனமாக வாங்குவோம் என்பது தெரிந்ததே.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம், உங்களுக்குத் தெரிந்திராத தகவல்கள்!

இருப்பினும் உங்கள் எதிர்பார்ப்பை மீறி நீங்கள் வாங்கிய ஆப், உங்களுக்கு தேவையான அளவிற்கு உதவிவைல்லை என்றால் உங்களுடைய பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். பணத்தை திரும்ப பெற நாம் கூகுளை அணுக வேண்டிய அவசியம் இல்லை. அந்த ஆப் தயாரிப்பாளர்களையே நாம் அணுகலாம்.

இனி எப்படி பணத்தை திரும்ப பெறலாம் என்பதை பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப் அல்லது கேம் டெவலப்பரிடம் பணம் திரும்ப பெற கோரிக்கை வைத்தல்

ஆப் அல்லது கேம் டெவலப்பரிடம் பணம் திரும்ப பெற கோரிக்கை வைத்தல்

ஆப் அல்லது கேம் தயாரிப்பாளரின் விபரங்கள் அந்த ஆப்-ன் விபரங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது ஆப் தயாரிப்பாளரின் இமெயில் அல்லது மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் மூலம் நீங்கள் வாங்கிய ஆப், உங்களுக்கு எவ்வாறு திருப்தி செய்யவில்லை என்பதை தயாரிப்பாளர்களுக்க் விளக்கவும். இதன் மூலம் உங்கள் பணம் திரும்ப வரும் வாய்ப்பு உள்ளது.

இரண்டே மணி நேரத்தில் பணம் திரும்ப பெறுவது எப்படி?

இரண்டே மணி நேரத்தில் பணம் திரும்ப பெறுவது எப்படி?

முதலில் நீங்கள் ஒரு ஆப்-ஐ டவுண்லோடு செய்வதற்கு முன்பே அதில் உள்ள பாலிசிகளில் பணம் திரும்ப பெறும் பாயிண்ட் இருக்கின்றதா? என்பதை கவனித்து கொள்ள வேண்டும். கூகுள் நிறுவனம் ஒரு ஆப்-ஐ பர்சேஸ் செய்த இரண்டு மணி நேரங்களுக்குள் பணம் திரும்ப பெறும் வசதியை அனுமதித்து உள்ளதால் உங்களுக்கு திருப்தி இல்லாத ஆப்-க்காக கொடுத்த பணம் நிச்சயம் கிடைக்கும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: menu button>My account>my Orders>Locate the app to be refunded>இந்த இடத்தில் நீங்கள் இந்த ஆப்-ஐ வாங்கி இரண்டு மணி நேரங்களுக்கு குறைவாக இருந்தால் மட்டுமே பணம் திரும்ப பெறும் ஆப்சன் இருக்கும். அதற்கு மேல் ஆகிவிட்டால் பணத்தை திரும்ப பெறும் ஆப்சன் இருக்காது. எனவே உங்கள் பணத்தை திரும்ப பெற இரண்டு மணி நேரம் மட்டுமே இருக்கும் இந்த ஆப்சனை க்ளிக் செய்தால் போதும். உங்கள் பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்துவிடும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுளை உதவிக்கு அழையுங்கள்:

கூகுளை உதவிக்கு அழையுங்கள்:

ஒருவேளை உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக கூகுள் ஹெல்ப்லைனுக்கு சென்று முறையிடலாம். அவர்கள் உங்கள் கோரிக்கையையும், ஆப் டெவலப்பரின் பாலிசிகளையும் ஆராய்ந்து உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதை முடிவு செய்வார்கள்

சரி கூகுளை எப்படி அணுகுவது?

சரி கூகுளை எப்படி அணுகுவது?

ஆப் டெவலப்பர் உங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க சம்மதிக்கவில்லை என்றால் கூகுளை கீழ்க்கண்ட முறைகளின்படி அணுகுங்கள். கூகுள் ப்ளே இணையதளத்திற்கு சென்று Click on Contact Us option>Tap on Android apps and games>Request a refund என்ற ஆப்சனை தேர்வு செய்தால் உங்களுக்கு போன் அழைபு, இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் வழியாக கூகுள் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் பணம் திரும்ப கிடைப்பது குறித்த ஆலோசனைகளை கூகுள் அளிக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எவ்வளவு நாளுக்குள் உங்கள் பணம் உங்கள் கைக்கு கிடைக்கும்.

எவ்வளவு நாளுக்குள் உங்கள் பணம் உங்கள் கைக்கு கிடைக்கும்.

சரி ஒரு வழியாக ஆப் டெவலப்பர் உங்கள் பணத்தை கொடுக்க சம்மதித்துவிட்டார் என்றால் அந்த பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வர எத்தனை நாள் ஆகும். கிரெடிட் கார்ட் அல்லது பேபால் முறையில் உங்கள் பணம் 3 முதல் 5 நாட்களுக்குள் உங்கள் அக்கவுண்டில் பணம் சேர்ந்துவிடும். அல்லது உங்களுக்கு கூகுள் ப்ளே பேலன்ஸ் அல்லதுகூகுள் வேலட் பேலன்ஸ் இருந்தால் ஒரே ஒரு நாளில் உங்கள் பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்துவிடும்.

என்ன பாஸ், இப்போது மகிழ்ச்சிதானே. இதனால் பயமின்றி கூகுள் ப்ளே ஸ்டோரில் பணம் கொடுத்து ஆப்'கள் வாங்கலாம் தானே

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here's how to get a refund on apps you purchased from the play store. Take a look.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X