ஃபேஸ்புக்கில் ஆட்டோபிளே ஆகும் வீடியோவை நிறுத்துவது எப்படி?

Written By:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக பிளே ஆகும் வசதியை ஃபேஸ்புக் கொண்டு வந்தது.

ஃபேஸ்புக்கில் ஆட்டோபிளே ஆகும் வீடியோவை நிறுத்துவது எப்படி?

இதற்கு ஃபேஸ்புக் பயனாளிகள் பெரும்பாலானோர் ஆதரவு தந்தாலும் ஒருசிலர் இதை விரும்பவில்லை. தேவைப்படும் வீடியோவை மட்டுமே பிளே செய்து பார்த்த வந்த பயனாளிக்கு இந்த வசதி அசெளகரியமாக இருந்தது.

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்

அதுமட்டுமின்றி மொபைலில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு தேவையில்லாமல் அவர்களுடைய டேட்டா ஆட்டோமெட்டிக் வீடியோ பிளேவால் செலவானது. கவலை வேண்டாம். இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய வழி உள்ளது. அதாவது ஆட்டோமெட்டிக் வீடியோ பிளேவை நீங்கள் உங்கள் மொபைலில் டிஸேபிள் செய்யலாம். அது எப்படி என்பதை தற்போது பார்ப்போமா..

சோனி எரிக்சன் Xperia XZ மாடலில் என்னென்ன புதுமை இருக்கின்றது தெரியுமா?

ஸ்டெப் 1: ஃபேஸ்புக்கில் லாக் அவுட் ஆப்சனுக்கு சற்று மேலே உள்ள செட்டிங்ஸ்-ஐ முதலில் கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2: அதில் உள்ள டிராப் டவுன் ஆப்சனை கிளிக் செய்து பின்னர் அதில் உள்ள ஆட்டோ பிளே வீடியோவை தேர்வு செய்து அதை ஆஃப் செய்யுங்கள்

பிஎஸ்என்எல் அதிரடி : வரம்பற்ற டேட்டா, 24 மணி நேர இலவச வாய்ஸ் கால்ஸ்..!

மேற்கண்ட வழி கம்ப்யூட்டர் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும். இனி ஆண்ட்ராய்டு மொபைல் போனில் எப்படி டிஸேபிள் செய்வது என்று பார்ப்போம்.


ஸ்டெப் 1: வலது மேல் பகுதியில் உள்ள செட்டிங்ஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 2: ஆப் செட்டிங்கை கண்டுபிடிக்கும் வரை ஸ்குரோல் செய்யுங்கள்

ஸ்டெப் 3: வீடியோ ஆட்டோ பிளே ஆப்ஷன் வந்தவுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்

ஸ்டெப் 4: அதில் உள்ள ஆட்டோ பிளே ஆப்சனில் ஸ்டாப் என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்

இனி ஐஓஎஸ் பயனாளிகளுக்கு எப்படி என்பதை பார்ப்போம்

ஸ்டெப் 1: வலது மேல்புறத்தில் உள்ள செட்டிங் ஆப்சனை தேர்வு செய்யுங்கள்

ஸ்டெப் 2: ஸ்குரோல் டவுன் செய்து செட்டிங்கை தேர்ந்தெடுங்கள்

ஸ்டெப் 3: அக்கவுண்ட் செட்டிங் சென்று அதில் உள்ள வீடியோ மற்றும் போட்டோவை தேர்வு செய்யுங்கள்

ஸ்டெ 4: இனி ஆட்டோ ப்ளேயை அழுத்துங்கள்

ஸ்டெப் 5: ஆட்டோ பிளே பக்கம் வந்ததும் 'நெவர் ஆட்டோபிளே வீடியோஸ்' என்பதை கிளிக் செய்யுங்கள். இனி ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோ உங்களை தொந்தரவு செய்யாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
A few months back, the social networking site Facebook has enabled the auto-playing videos option on its website and apps, which is great if you want to watch a lot of videos.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்