மொபைல் இருக்கும், கம்ப்யூட்டர் இருக்கும், உங்க கண் இருக்குமா..?!

|

கண் சோர்வு (Eye fatigue) அல்லது கண்விகாரம் என்ப்னது ஒரு பொதுவான கண்களுக்கு எரிச்சலூட்டும் ஒரு நிலையாகும், அதுமட்டுமின்றி கண்களில் சோர்வு, அரிப்பு, எரிச்சல் ஆகிய அறிகுறிகளும் இந்த நிலையில் அடங்கும்.இந்த கண் சோர்வு மிகவும் அரிதாக தான் ஒரு மோசமான சுகாதார சிக்கலாகும் இருப்பினும் வீட்டில் அல்லது வேலை செய்யுமிடத்தில் நாம் செய்யும் சில முன்னெச்சரிக்கை பண்புகள் / நடவடிக்கைகள் மூலம் இந்த கண் சோர்வை தடுக்க அல்லது குறைக்க முடியும்..!

கண் சோர்வு ஏற்பட மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாக டிஜிட்டல் சாதனங்கள் திகழ்கிறது. முக்கியமாக கணினி திரை, ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீடியோ கேம்கள். அப்படியான கண் அரிப்பு பாதிப்புகள் நடைபெறாமல் செய்ய நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விடயங்களைதான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

#1

#1

உங்கள் கணினி திரையில் மாற்றம், உங்கள் வேலை சூழலில் மாற்றம், உங்கள் வேலை பழக்கங்களில் மாற்றம் மற்றும் உங்கள் கண்களை கவனித்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் போன்ற 4 மாற்றங்களை நீங்கள் கொண்டு வந்து விட்டால் உங்கள் கண்கள் அற்புதமான காட்சிகளை வழங்கி கொண்டே இருக்கும்.

#2

#2

உங்கள் கண்களுக்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் குறைந்த பட்சம் 20-26 அங்குல இடைவெளி வேண்டும்.

#3

#3

அடிக்கடி திரையில் இருக்கும் தூசி மற்றும் கைரேகைகள் அழுக்குகளை சுத்தம் செய்யுங்கள். திரையில் இருக்கும் தூசிகளும் அழுக்குகளும் கண் கூச்சு மற்றும் பிரதிபலிப்பு பிரச்சினைகளை அதிகரிக்கும்.

#4

#4

உங்கள் திரை மீது கண்ணை கூச்சை தவிர்க்கும் வகையிலான் க்ளேர் பில்டர் பயன்படுத்தினால் மிக நல்லது.

#5

#5

கண்ணை கூசும் மற்றும் கடுமையான பிரதிபலிப்புகளை உண்டாக்கும் விளக்குகளை தவிர்க்கவும்..!

#6

#6

அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான நாற்காலிகளை பயன்படுத்தவும்.

#7

#7

உங்கள் கம்ப்யூட்டரின் மிக அருகாமையில் 'ப்ளின்க்' (Blink) அதாவது இமைக்கவும் என்று எழுதி ஒட்டி வைத்துக் கொள்ளவும், அது உங்களுக்கு இமைக்க வேண்டும் என்று ஞாபகப்படுத்தும். அதிகம் இமைக்க இமைக்க கண்களுக்கு பாதிப்பு குறையும்.

#8

#8

கணினி வேலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட மற்றும் ஒரு வழக்கமான ஓய்வுதனை எடுத்து கொள்ளவும்.

#9

#9

20-20-20 செய்முறையை முயற்சிக்கலாம் அதாவது ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், 20 அடி தொலைவில் இருக்க கூடிய ஒரு பொருளை 20 நொடிகள் வரை நீடித்து பார்க்க வேண்டும். இந்த செய்முறை உங்கள் கண்களுக்கு நல்ல ஓய்வை வழங்கும்.

#10

#10

சூடான நீரில் நனைத்த ஒரு துணியினால் சோர்ந்த / உலர்ந்த கண்களை துடைக்கலாம். (கண்களை மூடிய நிலையில்)

#11

#11

கண்கள் மிகவும் உலர்ந்த நிலைக்கு வந்துவிட்டால் செயற்கை கண்ணீர் களிம்பு (artificial tears ointment) பயன் படுத்தி கண்களை சரி செய்யலாம்.

#12

#12

உட்புறங்களில் வேலை செய்யும் போது கண்கள் உலர்ந்து போவதை தடுக்க காற்றுத் தூய்மிப்பி ( air cleaner) மற்றும் ஈரப்பதமூட்டி (humidifier) ஆகியவைகளை பயன்படுத்தலாம்.

#13

#13

மொபைல்போன்கள் விந்தணுக்களை 'எப்படியெல்லாம்' பாதிக்கிறது..!?


தலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.?!

#14

#14

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Eye fatigue can be prevented or reduced by making simple changes. Red more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X