லாப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் ரிலையன்ஸ் ஜியோ பார்கோடுகளை பெறுவது எப்படி?

Written By:

ரிலையனஸ் ஜியோ வழங்கியிருக்கும் சலுகைகளுக்கான வரவேற்பு இன்றும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ தனது மலிவு விலை பட்டியலின் மூலம் இந்திய டெலிகாம் சந்தையின் விலைப் பட்டியலே முற்றிலுமாக புரட்டிப் போட்டிருக்கின்றது.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பார்கோடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஜியோ 4ஜி சிம் கார்டுகளை வழங்கி வருகின்றது. 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பயனர்கள் எளிதாக பார்கோடினை உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போன் இல்லாமல் லாப்டாப் மற்றும் கணினிகளுக்கும் ஜியோ பார்கோடு பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி லாப்டாப் மற்றும் கணினிகளுக்கும் ஜியோ பார்கோடு பெறுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆண்ட்ராய்டு விர்ச்சுவல் மெஷின்

முதலில் ஆண்ட்ராய்டு விர்ச்சுவல் மெஷின் மென்பொருளினை இன்ஸ்டால் செய்ய வேண்டும். சந்தையில் பிரபலமானவை என்றால் Bluestacks, Youwave அல்லது Nox App Player ஆகும், இவற்றில் Nox App Player மென்பொருள் எங்களின் தேர்வு ஆகும். இதனை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கணினியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூட் மோட்

அடுத்து Nox App Player மென்பொருளின் ரூட் மோடினை செட் செய்ய வேண்டும். இதற்கு Settings>General> Enable Root Mode ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

மைஜியோ ஆப் ஏபிகே

அடுத்து கூகுளில் இருந்து மைஜியோ ஏபிகே ஃபைலினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்ய Nox App ஓபன் செய்ய வேண்டும். 

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டவுன்லோடு

மைஜியோ ஆப் ஓபன் செய்து மற்ற ஜியோ ஆப்களையும் டவுன்லோடு செய்ய வேண்டும். அனைத்து ஆப்களும் இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருந்து பின் மைஜியோ ஆப்பினை மீண்டும் ஓபன் செய்ய வேண்டும். இனி உங்களது ஆப்'இல் 'Get Jio SIM' ஆப்ஷன் இருப்பதைப் பார்க்க முடியும். இதை கிளிக் செய்து பார்கோடு பெற முடியும்.

ரீசெட்

பார்கோடு ஜெனரேட் செய்ததும் Nox App ரீசெட் செய்ய வேண்டும். இனி முன்பு குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி புதிய பார்கோடினை ஜெனரேட் செய்ய முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Reliance Jio
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்