ரெஸ்யூம்களில் விண்ணப்பதாரர்கள் செய்யும் பொதுவான 4 தவறுகளும், தீர்வுகளும்.!

குறிப்பாக, நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கூறுங்கள் - என்னால் கட்டப்பட்ட, உருவாக்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட, வடிவமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட என்ற வார்த்தைகளை பயன்படுத்தவும்.

|

ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் "ரெஸ்யூம்கள் எப்போதுமே படிக்கப்படுவதில்லை, சுமார் ஒரு 15 நொடிகளுக்கு பார்க்கப்படுகிறது" - அந்த 15 அல்லது 20 நொடிகளுக்குள் நம் மீதான, நமது ரெஸ்யூம் மீதான மதிப்பை வலுப்படுத்திக் கொள்வதென்பது சாதாரணமான காரியமில்லை.

இதற்கிடையில் மிகவும் பொதுவான தவறுகளை (குறிப்பாக மென்பொருள் பொறியாளர்கள், தொழிலிநுட்பபணியாளர்கள்) நிகழ்த்தும் போது, ரெஸ்யூமே ஒழுங்கா ரெடி பண்ண தெரியல இதுல வேலை வேற கொடுக்கணுமா.??" என்ற எண்ணம் சர்வ சாதாரணமாக எழும்.

தீவிரமான தவறுகள்

தீவிரமான தவறுகள்

முதலில் உங்களின் ரெஸ்யூம் எப்படி பரிசீலனை செய்யப்படுகிறது என்பதை ன் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிரதானமாக ரெஸ்யூம்களில் முதலில் சில மிகவும் பொதுவான தீவிரமான தவறுகள் தான் கருத்தில் கொள்ளப்படும். அப்படியாக, தங்கள் ரெஸ்யூம்களில் விண்ணப்பதாரர்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன.?

நீண்ட ரெஸ்யூம்கள் :

நீண்ட ரெஸ்யூம்கள் :

சுருங்கச்சொல்லி விளங்கப்புரிய வைக்கும் ரெஸ்யூம்கள் நிச்சயம் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் எவ்வளவு அனுபவம் கொண்டிருந்தாலும், எவ்வளவு விடயங்களை கூற வேண்டியதாக இருப்பினும் அது சுருக்கமாக இல்லாத பட்சத்தில் முதற்படியாக உங்களின் ரெஸ்யூம் புறக்கணிக்கப்படும், பின்னர் நீங்களும் தான்.

ரெஸ்யூமின் 80% வார்த்தைகள்

ரெஸ்யூமின் 80% வார்த்தைகள்

நீங்கள் ஒரு ஐந்து பக்கம் கொண்ட ரெஸ்யூமை வைத்திருக்கும்போது என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கே கொஞ்சம் ஓவராக இருக்கிறது அல்லவா.?/ ஆக அதை வரையறை செய்வதன் மூலம், அதே உள்ளடக்கத்தை ஒரு பக்கத்தில் சுருக்கலாம். இங்கு முக்கியமாக உங்களின் ரெஸ்யூமின் 80% வார்த்தைகள் படிக்கப்படாது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிக பட்சம்

அதிக பட்சம்

நீங்கள் ஒரு 10 வருட அனுபவம் கொண்டிருந்தாலும் கூட உங்கள் ரெஸ்யூம் 1 பக்கத்தில் இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள், அதிக பட்சம் இரண்டு பக்கங்கள் இருக்கலாம். அதற்கு மேல் கூடாது.

பத்திகள் / நீளமான புல்லட்ஸ் :?

பத்திகள் / நீளமான புல்லட்ஸ் :?

ஒருவரின் விண்ணப்பத்தை வாசிப்பதற்கு 15 வினாடிகள் மட்டுமே கிடைக்கும்போது, உங்கள் ரெஸ்யூமின் எந்த பத்திகளும் படிக்கப்பட போவதில்லை. அதற்கு நேரமும் இருக்காது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ஆக இந்த இடத்தில நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பினால், அதை சிறியதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு புல்லட் பாயிண்ட்களும் 1 - 2 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும், புல்லட்களுக்கே இந்த கட்டுப்பாடு என்றால் பத்திகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.!

அணி / குழு கவனம்:

அணி / குழு கவனம்:

நீங்கள் பணிபுரிந்த உங்கள் அணி சாதனைகள் ரெஸ்யூமில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் வேலை கேட்பது உங்களுக்காக, உங்களின் அணிக்காகவோ அல்லது குழுவிற்காகவோ இல்லை. நீங்கள் குறிப்பாக, நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கூறுங்கள் - என்னால் கட்டப்பட்ட, உருவாக்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட, வடிவமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட என்ற வார்த்தைகளை பயன்படுத்தவும்.

குளறுபடியான ரெஸ்யூம் :

குளறுபடியான ரெஸ்யூம் :

உங்கள் ரெஸ்யூம் குழப்பமான ஒன்றாக இருந்தால் தொழில்நுட்ப துறைகளில் மட்டுமின்றி பெரும்பாலான துறைகளில் புறக்கணிப்பை சந்திக்க வேண்டியது இருக்கும்.

அதன் முடிவு.?

அதன் முடிவு.?

நீங்கள் ஒரு வடிவமைப்பு கில்லாடி என்பதை உங்களின் வேலை சார்ந்த விடயங்கள் தான் கூற வேண்டுமே ஒழிய உங்களின் ரெஸ்யூம் வடிவமைப்பின் வழியாக கூறக்கூடாது. பல மென்பொருள் பொறியாளர்கள் மைக்ரோசாப்ட் வேர்ட் ஒன்றை திறந்து, கண்ட்ரோல்+பி-ஐத் தாக்கி, தட்டச்சு செய்ய ஆரம்பிக்கிறார்கள். அதன் முடிவு.? - இரைச்சலான ரெஸ்யூம், அதனை தொடர்ந்து புறக்கணிப்பு.

Best Mobiles in India

Read more about:
English summary
What are common mistakes that applicants make when writing their resumes for tech companies? Read more about this in Tamil GizBot,

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X