வாட்ஸ்ஆப் உபயோகிப்பதில் நிபுணர் ஆகுங்கள்-இந்த பத்து வழிகளை பின்பற்றி.!

வாட்ஸ் ஆப் வாட்ஸ் ஆப்பினை உபயோகிப்பதற்கான 10 எளிய குறிப்புகள்

By Ilamparidi
|

வாட்ஸ்ஆப் ஆனது இன்று உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக் கொண்ட ஓர் முன்னணி சமூக வலைத்தளமாகும் இதன் வரவிற்கு பிறகு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம் மொபைல் நெட்வொர்க்குகளின் வழியே மெசேஜ் அனுப்புகிற முறையினை பயன்படுத்துவதில்லை.

வாட்ஸ் ஆப்ஸ் ன் வழியாகவே கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர் நண்பர்களுக்குள்ளான சாட்டிங் உள்ளிட்டவை யாவும் இதில் அடங்கும்
அத்தகைய முன்னணி சமூக வலைத்ததளமான வாட்ஸ் ஆப்பினை கீழ்க்கண்ட எளிய முறைகளை பயன்படுத்தி நீங்களும் வாட்ஸ் ஆப் நிபுணர் ஆகுங்கள்.

குரூப் சாட்:

குரூப் சாட்:

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் குரூப் சாட் வசதியினை வழங்குகிறது வழங்குகிறது இதன் வழியே பல நபர்களை ஓர் குரூப்பாக ஒன்றிணைக்க முடியும் அதேபோல் ஏதேனும் ஓர் தகவலை குரூப் சாட் வசதியில் ஒரே சமயத்தில் எல்லோருக்கும் விரைவாக கொண்டு சேர்க்க முடியும் அதேபோல் குறிப்பிட்ட குரூப்பிலிருந்து மெசேஜ் வருவதை அந்த குரூப்பிலிருந்து வெளியேறாமல் மெசேஜ்ஜினை மட்டும் நிறுத்தும் வசதியும் வசதியும் உள்ளது.

கம்ப்யூட்டரில் வாட்ஸ் ஆப்:

கம்ப்யூட்டரில் வாட்ஸ் ஆப்:

மொபைலில் மட்டுமல்ல கம்ப்யூட்டரிலும் வாட்ஸ் ஆப்பினை நாம் உபயோகிக்கலாம் உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள வாட்ஸ் ஆப் செயலியில் செட்டிங்ஸ் க்கு சென்று யூஸ் வாட்ஸ் ஆப் டெஸ்க்டாப்/கம்ப்யூட்டர் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவினை நீங்கள் பயன்படுத்தப்போகிற டெஸ்க்டாப்/கம்ப்யூட்டர் மீது சில நொடிகள் காண்பித்தால் ஓஆர் கோடு ஸ்கேன்செய்யப்பட்டு உங்கள் அக்கௌன்ட் உடனே லாக்இன் செய்து கணினி வழியாக வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தலாம்.

பிரைவஸி:

பிரைவஸி:

வாட்ஸ் ஆப் செயலியில் நமது பிரைவசியையும் எளிதாக தக்கவைத்துக்கொள்ளலாம்.நாம் எப்போது கடைசியாக ஆன்லைனில் இருந்தோம் நமது ஸ்டேட்டஸ் புரபைல் போட்டோ உள்ளிட்டவற்றை நாம் அனைவரிடமோ அல்லது நமது காண்டக்ட்டில் உள்ளவர்களிடம் மட்டுமோ அல்லது குறைப்பிட்டவர்களிடம் மட்டுமோ பகிர்ந்துகொள்கிற தெரியப்படுத்துகிற வாய்ப்பினை வழங்குகிறது வாட்ஸ் ஆப் இதற்கு செட்டிங்ஸ் அக்கௌன்ட் பிரைவசி என்கிற ஆப்ஷனில் சென்று நமக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

ஆர்ச்சிவ்:

ஆர்ச்சிவ்:

உங்களுக்கு வந்துள்ள மெசேஜ்களை படிக்க முடியாத சூழலில் உள்ளீர்களா கவலை வேண்டாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறவற்றை ஆர்ச்சிவ் செய்துவைத்துவிட்டு பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்கிற சூழலில் பார்த்துக்கொள்ளலாம் இதற்கு ஆர்ச்சிவ் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும்.

உங்கள் மெசேஜ் பார்க்கப்பட்டுவிட்டதா என தெரிந்துகொள்ள:

உங்கள் மெசேஜ் பார்க்கப்பட்டுவிட்டதா என தெரிந்துகொள்ள:

உங்கள் நண்பருக்கு நீங்கள் அனுப்பிய மெசேஜ் அவரால் பார்க்கப்பட்டுவிட்டதா என தெரிந்துகொள்ள நீங்கள் அனுப்பிய மெசேஜ் சென்றுவிட்டதற்கு ஒற்றை கிரே கலர்கோடும் டெலிவரி செய்யப்பட்டதற்கு இரண்டு கிரே கலர் கோடுகளும் சென்றடைந்த மெசேஜ் அவரால் பார்க்கப்பட்டுவிட்டதற்கு நீல நிறத்தில் இரட்டை கோடுகளும் காட்டப்படும் இதனைக்கொண்டே நாம் அனுப்பிய மெசேஜ் நிலையினை தெரிந்துகொள்ளலாம்.

பிளாக் செய்ய:

பிளாக் செய்ய:

நீங்கள் குறிப்பிட்ட நபரை உங்களுக்கு மெசேஜ் செய்யா வண்ணம் பிளாக் செய்ய செட்டிங்ஸ்>அக்கௌன்ட்> பிரைவசி>பிளாக் என்ற வசதியின் மூலம் பிளாக்செய்யலாம்.

ஸ்டார்:

ஸ்டார்:

நீங்கள் நீண்ட உரையாடலில் ஈடுபடுகையில் சில குறிப்பிட்ட மெசேஜ்களுக்கோ அல்லது குறிப்பிட்ட பகுதிக்கோ ஸ்டார் குறி இட்டு வைப்பதின் மூலம் எளிதாக மீண்டும்அவற்றை நம்ம சென்றடையலாம்.ஸ்டார் குறி இட விரும்புகிற மெசேஜினை சில நொடிகள் அழுத்திப்பிடித்து ஸ்டார் குறி இடுகின்ற ஆப்ஷனை செலக்ட் செய்து ஸ்டார்குறி இடலாம்.

பேக் அப் செய்ய:

பேக் அப் செய்ய:

உங்கள் வாட்ஸ் ஆப் செயலியிலுள்ள மெசேஜ்களை கூகிள் டிரைவ் ஐகிளவுட் உள்ளிட்டவற்றின் வழியாக பேக்அப் செய்துகொள்ளலாம் இதனை நாள் வாரம் மாதம்என உங்களுக்கு தேவையான முறையில் எப்போது பேக் அப் செய்ய வேண்டுமென ஷெட்யூல் செய்துக்கொள்ளலாம் நீங்கள் ரீ இன்ஸ்டால் செய்கிற பொது பேக் அப மெசேஜ் களை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.ஆனால் கூகிள் டிரைவ் ஐகிளவுட் உள்ளிட்டவை பாதுகாப்பானவை அல்ல.

டேட்டா மினிமைஸ்:

டேட்டா மினிமைஸ்:

அதிகமாக டேட்டா செலவழிப்பதாக உணர்ந்தால் அதனை டேட்டா>ஸ்டோரேஜ் யூசேஜ் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து மாற்றியமைக்கலாம் குறைவாக டேட்டா உள்ளபோது மீடியா மெசேஜ்கள் யாவும் தானாகவே டவுன்லோடு ஆகாத வகையிலும் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Become a WhatsApp expert with these top 10 tips and tricks. Read more on this Tamil Gizbot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X