ஜியோ தயவில் குறைக்கப்பட்ட டேட்டா கட்டணங்கள் சிறந்த விலையைத் தேர்வு செய்வது எப்படி.??

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பிரீவியூ சேவை நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் குறைந்த விலையில் 4ஜி சேவைகளை வழங்குவதாக அறிவித்து முதல் மூன்று மாதங்களுக்கு இலவச சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கி வருகின்றது.

முதலில் ஜியோ லைஃப் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தச் சேவையானது சமீப நாட்களில் பல்வேறு இதர நிறுவனங்களின் கருவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது டேட்டா கட்டணங்களை குறைத்தும், பழைய கட்டணத்திலேயே அதிக டேட்டாக்களை வழங்கியும் வருகின்றன. இது அனைவரும் அறிந்த தகவல் என்றாலும் தற்சமயம் குறைக்கப்பட்ட விலைப்பட்டியலில் சிறந்த சேவைகளை தேர்வு செய்வது எப்படி என்பதைத் தான் இங்குத் தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்..

ஏர்டெல்

ஏர்டெல்

கடந்த சில வாரங்களாக ஏர்டெல் நிறுவனம் தனது சேவைக் கட்டணங்களை குறைத்ததோடு புதிய சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. அதன் படி அந்நிறுவனம் சமீபத்தில் வழங்கிய அறிவிப்பில் சுமார் 80 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சேவை

புதிய சேவை

அதன் படி ஏர்டெல் புதிய சேவையில் ரூ.51 செலுத்தி 1 ஜிபி 4ஜி டேட்டா பெற முடியும். இந்தச் சேவையை பெற ரூ.1498 செலுத்த வேண்டும். இதற்கு 1 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்கப்படுகின்றது. இதன் பின் சுமார் 12 மாத காலத்திற்கு ரூ.51 செலுத்தி 1 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா பெற முடியும்.

வோடபோன்

வோடபோன்

ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து வோடபோன் நிறுவனமும் தனது சேவைக் கட்டணங்களை குறைத்திருக்கின்றது. அதன் படி ரூ.297க்கு 1 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்குகின்றது. ஆண்டு முழுக்க பார்க்கும் போது 12 மாத காலத்திற்கு 13 ஜிபி டேட்டா ரூ.3861க்கு வழங்கப்பட்டு வருகின்றது.

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

ஜியோ போட்டியில் களம் கண்டிருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் 1 ஜிபி 3ஜி டேட்டாவினை ரூ.198க்கு வழங்குகின்றது. ஆண்டு முழுக்க பார்க்கும் போது 12 மாத காலத்திற்கு 13 ஜிபி டேட்டா ரூ.2574க்கு கிடைக்கின்றது.

ஐடியா

ஐடியா

ஐடியா நிறுவனம் தன் பங்கிற்கு 1 ஜிபி 3ஜி டேட்டாவினை ரூ.249க்கு வழங்குகின்றது. இவ்வாறு பார்க்கும் போது ஆண்டு முழுக்க 12 மாத காலத்திற்கு 13 ஜிபி டேட்டா ரூ.3237க்கு வழங்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

லாபம்

லாபம்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையானது இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போட்டி பல்வேறு இதர நிறுவனங்களின் சேவை கட்டணங்களைக் குறைக்க வழி செய்திருப்பது பொது மக்களாகிய நமக்கு லாபமான ஒன்றாகவே இருக்கின்றது.

காலகட்டம்

காலகட்டம்

இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களின் டேட்டா சேவைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை ஆகும். இதனால் 12 மாதங்களில் கிட்டதட்ட 13 டேட்டா திட்டங்களை பயன்படுத்த நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel and many others cut data tariff, how to choose the best deal Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X