உங்கள் வரும் செல்போன் அழைப்புகளில் பிரச்சனையா? இதோ தீர்வுக்கான வழிகள்

By Siva
|

மொபைல் போனை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவதே நினைத்த நேரத்தில் நினைத்த நபர்களுடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான்.

உங்கள் வரும் செல்போன் அழைப்புகளில் பிரச்சனையா? இதோ தீர்வுக்கான வழிகள்

ஆனால் நாம் பேசி கொண்டிருக்கும்போது நெட்வொர்க் பிராப்ளம் தந்தாலோ அல்லது நெட்வொர்க்கை ரிசீவ் செய்யும் அளவுக்கு நமது மாடல் இருந்தாலோ நாம் கடும் அதிருப்தி அடைவோம். தங்கு தடையின்றி நெட்வொர்க்கை ரிசீவ் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்,

1. உங்கள் போனின் நிறுவனம் மற்றும் மாடல் ரொம்ப முக்கியம்.

பிரச்சனை: ஒரே நிறுவனம் தயாரிக்கும் அனைத்தும் மாடல்களும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ரிசீவ் ஆண்டனா சில மாடல்களில் சிறப்பாகவும், சில மாடல்களில் மொக்கையாகவும் இருக்கும்., உதாரணமாக சாம்சங் எஸ்3 மாடல் மூன்று வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி ஆகின்றது. இதனால் எந்த நாட்டில் உற்பத்தி ஆன மாடல் சிறந்தது அல்லது தாழ்ந்தது என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 : வீழ்ந்த காரணம் இது தான்!

தீர்வு: எனவே போன் வாங்குவதற்கு முன்னர் அதே மாடலை வாங்கியவர்களின் விமர்சனங்களை முதலில் படியுங்கள். மேலும் நாம் வாங்கும் மொபைல் போன் உற்பத்தி ஆன நாடு, இடம் தரம் வாய்ந்ததுதானா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை IME எண் கொண்டு சரிபார்க்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் வரும் செல்போன் அழைப்புகளில் பிரச்சனையா? இதோ தீர்வுக்கான வழிகள்

2. ஆப்ஸ்

பிரச்சனை: மொபைல் போனில் உள்ள அதிகப்படியான ஆப்ஸ்கள், ஒப்பனில் உள்ள ஆப்ஸ்கள், ரன்னிங்கில் உள்ள ஆப்ஸ்கள் ஆகியவை வரும் போன்காலை இடைஞ்சல் ஏற்படுத்தும்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் : சிறந்த சேவை வழங்கும் நிறுவனம் எது??

தீர்வு: தேவையில்லாத ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யுங்கள். முக்கியமான ஆப்ஸை மட்டும் வைத்து கொண்டு ஸ்மார்ட்போனை மெயிண்டன் செய்தால் இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்.

3. ஆப்பரேட்டிங் சிஸ்டம் நல்லா இருக்கா?

பிரச்சனை: ஒரு போன் தங்குதடையின்றி சீராக செயல்பட நல்ல ஆப்பரேட்டிங் சிஸ்டம் முக்கியம். சிலசமயம் ஓ.எஸ்.களை அப்டேட் செய்யும்போது பிரச்சனை ஏற்பட்டு இதனால் அழைப்புகள் வரும்போது பிரச்சனை கொடுக்கலாம்

உங்கள் வரும் செல்போன் அழைப்புகளில் பிரச்சனையா? இதோ தீர்வுக்கான வழிகள்

தீர்வு: அப்டேட் செய்யும்போது கவனமாக இருக்கலாம். ஒருவேளை அப்டேட் செய்த ஓ.எஸ் சரியாக செயல்படவில்லை என்றாலோ அல்லது முற்றிலும் செயல்படவில்லை என்றாலோ உடனே அந்த நிறுவனத்தின் டெக்னிக்கல் நிபுணர்களை தொடர்பு கொண்டு சரிசெய்து கொள்ளுங்கள்.

4. இதிலும் டிராபிக் பிரச்சனையா?

பிரச்சனை: நாம் சாலையில் செல்லும்போது தான் டிராபிக்கில் மாட்டிக்கொள்ளும் பிரச்சனை உள்ளது என்று நினைக்க வேண்டாம். போனிலும் டிராபிக் பிரச்சனை வருவதுண்டு. ஒருசில பகுதிகளில் பயனாளிகளின் உபயோகிப்புத்திறன் அதிகம் இருந்தால் டிராபிக் ஆகி ஜாம் ஆவது உண்டு. குறிப்பாக பீக் டைமில் இந்த பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் வரும் செல்போன் அழைப்புகளில் பிரச்சனையா? இதோ தீர்வுக்கான வழிகள்

தீர்வு: உண்மையில் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு என்பது கிடையாது. டிராபிக் கொஞ்சம் ஸ்லோ ஆகும் வரை பொறுத்திருக்க வேண்டும். இல்லையெனில் சிக்னல் பூஸ்டர் வாங்கி உங்கள் வீட்டில் மாட்டிக் கொண்டால் இந்த பிரச்சனையின் தீவிரம் கொஞ்சம் குறைய வாய்ப்பு உண்டு.

5. பயணத்தினால் வரும் பிரச்சனை:

பிரச்சனை: நாம் மொபைல் போனுடன் பயணம் செய்யும்போது ஒரு பகுதியின் டவரில் இருந்து இன்னொரு டவருக்கு மாறுவதாலும், நாம் பயணம் செய்யும் வாகனங்களாக ரயில், பஸ் ஆகியவை மெட்டலில் இருப்பதாலும் மொபைல் போன் அழைப்பில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உங்கள் வரும் செல்போன் அழைப்புகளில் பிரச்சனையா? இதோ தீர்வுக்கான வழிகள்

தீர்வு: இந்த பிரச்சனைக்கு 'கிராடில்' என்ற சிக்னல் பூஸ்டர் உங்களுக்கு உதவலாம். மேலும் பயணத்தின்போது புளூடுத் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரின் மூலம் பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படலாம்.

6. டவரின் அருகில் இருக்கின்றீர்களா?

நீங்கள் போனை உபயோகப்படுத்தும் இடமும் டவர் இருக்கும் இடமும் உள்ள தூரம் மிக முக்கியம். ஒருசில டவர்கள் அதிக அளவு தூரத்திற்கு இயங்க முடியாத அளவுக்கு வீக் ஆக இருக்கலாம். இதுவே உங்கள் அழைப்பு உங்களுக்கு சரியாக வராததன் காரணமாகவும் இருக்கலாம்

தீர்வு: எப்போதும் உங்கள் போனின் சார்ஜ் முழு அளவு இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். மேலும் போன் பேசும்போது ஜன்னல் அருகே அல்லது வாசலுக்கு வெளியே வந்துவிடுங்கள். இதன்மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

7. சுற்றுப்புற சூழ்நிலையும் இதற்கு காரணமாம்

பிரச்சனை: உங்கள் வீடு இருக்கும் பகுதியில் பெரிய மலையோ, அதிகமான மரங்களோ அல்லது குன்றுகளோ இருந்தால் உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரிய பெரிய கான்கிரீட் கட்டிடங்களும் சிக்னலை வீக் ஆக்கும்.

பப்ளிக் கம்ப்யூட்டரில் ஃபேஸ்புக்கை லாக்-அவுட் செய்ய மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். இதோ ஐந்து எளிய வழிகள்

தீர்வு: இதற்கும் ஒரே தீர்வு சிக்னல் பூஸ்டர்தான். ஆண்டெனா உள்ள சிக்னல் பூஸ்டர் வாங்கி உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் மாட்டிக்கொண்டால் இந்த பிரச்சனை சரியாகிவிடும்

8. நெட்வொர்க் நிறுவனங்களின் சேவை;

பிரச்சனை: ஒருசில நெட்வொர்க் நிறுவனங்கள் சில பகுதிகளில் நல்ல சிக்னலும், ஒருசில பகுதிகள் வீக்'ஆன சிக்னலும் இருக்கும் படி அமைந்திருக்கும்.

உங்கள் வரும் செல்போன் அழைப்புகளில் பிரச்சனையா? இதோ தீர்வுக்கான வழிகள்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தீர்வு: இதற்கு ஒரே தீர்வு, உங்கள் ஏரியாவில் எந்த நெட்வொர்க் நிறுவனத்தின் சிக்னல் நன்றாக உள்ளது என்பதை அறிந்து அந்த நிறுவனத்தின் சிம்கார்டை மாற்றி கொள்வதுதான் சிறந்தது.

Best Mobiles in India

English summary
A list of causes for bad cell phone reception and how to solve these problems.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X