வீட்டில் வை-பை கனெக்ஷன் மக்கர் பண்ணுதா..?! சரி செய்ய எளிமையான டிப்ஸ்.!

சிறப்பான முறையில் வை-பை கனெக்ஷன் பெற்றிட சில சூப்பர் டிப்ஸ்.!

Written By:

நம் பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கும் அத்தியாவசியனமான விடயங்களில் ஒன்று தான் - மெதுவான இன்டர்நெட்..! அதுவும் வீட்டில் இருக்கும் வை-பை கனெக்ஷனில் 'தொல்லை-சிக்கல்' என்றால் சொல்லவே வேண்டாம் - காதில் இருந்து புகை வராத குறையாக கோபம் வரும். இனி வை-பை தொல்லையால் உங்களுக்கு கோபமும் வராது, காதில் இருந்து புகையும் வராது - எப்படி என்று கேட்கிறீர்களா...?

சிறப்பான முறையில் வை-பை கனெக்ஷன் பெற்றிட சில சூப்பர் டிப்ஸ்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளை தெரிந்து கொள்ளுங்கள், கூலாக வை-பையை பயன்படுத்துங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரவுட்டர் ஆன்டனாக்கள் மேல்நோக்கி தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சற்று மாற்றியும் வைக்கலாம். தரைமட்டத்தில் ரவுட்டரை வைக்கவே கூடாது. சற்று உயரமாக வைக்க வேண்டும். முடிந்தவரை வீட்டின் நடுவே ரவுட்டரை வைத்தால் நல்லது.

ரவுட்டரை வீட்டின் நடுவே தான் வைக்க வேண்டும் என்ற சட்டமில்லை, நீங்கள் அதிகம் எந்த அறையில் இன்டர்நெட்டை பயன் படுத்துவீர்களோ அங்கும் வைக்கலாம். பிற எலெகட்ரானிக் பொருட்களை ரவுட்டர் அருகே வைப்பதை தவிர்த்திடுங்கள்.

ரவுட்டரை உங்கள் வீட்டு பொருட்கள் எதுவும் மூடி மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி உங்கள் வை-பை சிக்னல் எப்படி இருக்கிறது என்பதை காண்காணிக்க வேண்டும்.

ரவுட்டர் தரமானதாக இருந்தால் மட்டும் போதாது, தரமான இன்டர்நெட் சேவை வழங்குநர் மையமும் வேண்டும். உங்கள் வை-பையை வேறு யாராவது திருட்டுத்தனமாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் (அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றலாம்).

அவ்வப்போது உங்கள் ரவுட்டரை 'ரீபூட்' செய்ய தவறாதீர்கள். வை-பை கனெக்விட்டியை அதிகரிக்கும் சாப்ட்வேர்களும் சில உண்டு, அவைகளை பயன்படுத்தலாம்.

மிகவும் முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது செக்கன்டரி ரவுட்டர் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ரவுட்டர்களுக்கு புதிய ஆன்டனாக்களை பொருத்தலாம்.

எல்லாமே சரியாக இருக்கும் போதும் கூட இன்டர்நெட் சரியாக கிடக்கவில்லை என்றால் உங்கள் ரவுட்டரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

ராகிங் செய்யப்பட்ட சுந்தர் பிச்சை - வெளிப்படுத்திய ஹாஸ்டல் நண்பர்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
7 Sipmle Hacks To Get Better Wi-Fi Connectivity At Home. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்