ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்துவதற்கான 7 சுவாரஸ்ய வழிகள்.!

உங்கள் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்துவதற்கான சுவாரஸ்ய வழிகள்-இப்படியும் பயன்படுத்தலாம் உங்கள் மொபைலை.

Written By:

ஸ்மார்ட்போன்கள் இன்றைய சூழலில் நம் வாழ்வின் ஓர் ஒருங்கினைந்த பகுதியாக மாறிவிட்டன இவ்வாறு நம் வாழ்வின் இன்றியமையாத-தவிர்க்க இயலாத பொருட்களாக மாறிபோனதிற்கான காரணம் தொலைவில் உள்ளோரை தொடர்புகொள்ளக்கூடிய சாதனம் என்பதனைக்காட்டிதலும் பல சுவாரஸ்ய விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளதே காரணம் ஆகும்.

பொதுவாகவே அனைவரும் ஸ்மார்ட்போன்களை தொலைவில் உள்ளோரை தொடர்புகொள்வதற்காகவும் குறுந்தகவல் அனுப்புவதற்காகவும் சமூகவலைதளைங்களை உபயோகிப்பதற்காகவும்-புதிய தகவல்களை பெறுவதற்காகவும் பாடல் கேட்பதற்காகவுமே பயன்படுத்துகிறார்கள்.இவற்றிலிருந்து மாறுபட்டு ஆச்சரியமளிக்கத்தக்கவகையில் பயனுள்ளவகையில் உங்கள் ஸ்மார்ட்போனை உபயோகிக்க கீழ்காணும் தகவல்களை காணுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் இதய துடிப்பை உங்கள் ஸ்மார்ட் போன்களின் மூலம்:

இன்றைய சூழலில் அனைவரும் பல காரணங்களுக்காக மருத்துவமனைக்கு பயணிக்கிறோம் அவற்றுள் இதய துடிப்பின் அளவுகளை உங்கள் ஸ்மார்ட் போன்களைக் கொண்டே கண்டறியலாம் ஸ்மார்ட்போன்களில் கேமராவிற்காக கொடுக்கப்பட்டுள்ள பிளாஷ் லைட்டின் லென்ஸின் மேல் சில நிமிடங்கள்நம் விரலினை அழுத்திவைத்து பிளாஷ் ஒளியை விழச்செய்து இதய துடிப்பின் அளவினை அளவிடக்கூடிய ஸ்மார்ட்போன் செயலிகளின் மூலம் உங்களது இதய துடிப்பின் அளவுகளை கண்டறியலாம்.

பின்தொடருங்கள் உங்கள் வருமானத்தையும்-செலவுகளையும்:

உங்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்கள் வரவு செலவுகளின் தெளிவான தரவினை பெற்றிடுங்கள் இதன் வாயிலாக உங்கள் குடும்பத்தின் தெளிவான வரவு செலவு திட்டத்தினை வரையறுத்திட இயலும் உங்கள் வரவு செலவுகளை பின்தொடர்ந்திட பல ஸ்மார்ட்போன் செயலிகள் உள்ளன இத்தகைய செயலிகளை பயன்படுத்தி உங்கள் வரவு செலவுகளை தெளிவாக கண்டறிந்து குறைத்திட இயலும்.

நீர் கசிகின்கிற சன்னல்களை கண்டறிந்திடுங்கள்:

மழைக்காலங்களில் உங்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் சரியாக மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அவ்வாறு இல்லாமல் ஏதேனும் கடினமான நீர் கசிகின்ற பகுதிகளை உங்கள் ஸ்மார்ட் போன்கள் வாயிலாக கண்டறியலாம் நீர்கசிவதாக உங்களுக்கு சந்தேகம் உள்ள பகுதிகளில் உங்களது ஸ்மார்ட் போன் கேமராவுடன் ப்ளிர் ஒன்(flir one)போன்ற தெர்மல் இமேஜினை வழங்கக்கூடிய ஆஃப்ஸ்களை இணைப்பதில் மூலம் நீர் கசிவு ஏற்பட்ட பகுதிகளை நம் தெளிவாகக் கண்டறியலாம்.

 

பார் கோடு மற்றும் ஓ ஆர்(OR)ஸ்கேனிங்:

ஏதேனும் பொருட்கள் வாங்கச் செல்கையில் நமது ஸ்மார்ட் போன்களைக் கொண்டு அப்பொருட்களின் பார்கோடுகளைக் கொண்டு ஸ்கேன் செய்வதன் மூலம் அப்பொருட்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் விலைப்பட்டியலை நாம் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் போனை ஒலிபெருக்கியாக பயன்படுத்துங்கள்:

ஒலியினை ரெக்கார்ட் செய்யவேண்டிய சூழலின் போது உங்கள் ஹெட்செட் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள மைக்ரோபோன் மூலம்தெளிவான தரமான ஒலியினை ரெக்கார்ட் செய்ய முடியவில்லை என கவலை வேண்டாம் ஓ மைக் ( WO MIC)போன்ற ஒலிபெருக்கி செயலிகளை நாம் பயன்படுத்துவதன் மூலம் தெளிவான தரமுள்ள ஒலியினை நாம் ரெக்கார்ட் செய்யலாம்.

இதர சாதனங்களையும் கட்டுப்படுத்திடலாம்:

இன்றைய சூழலில் நாம் தொலைவிலிருந்தே ரிமோட்களின் (அகச்சசிவப்பு சென்சார்களின்) மூலம் பிற சாதனங்களை கட்டுப்படுத்திடலாம் பீல் ஸ்மார்ட் ரிமோட் போன்ற செயலிகளை நமது போன்களில் இன்ஸ்டால் செய்வதின் மூலம் ஒருவேளை ரிமோட்கள் தொலைந்து போனாலும் நமது போன்களின் மூலம் பிற கருவிகளை இயக்கலாம்.

மொழிபெயர்ப்பு வசதிகள்:

ஏதேனும் காரனுங்களுக்காகவோ வெளிநாட்டு பயணங்களின்போதோ பிற மொழிகள் தெரியவில்லை என கவலையுற வேண்டாம்.
உங்களது ஸ்மார்ட் போன்களின் வாயிலாகவே நாம் மொழிபெயர்ப்பு செயலிகளை பயன்படுத்தி நாம் நமக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் இவற்றில் கூகுள் ஆச்சரியமளிக்கக்கூடிய வகையில் நமக்கு தேவையான தகவல்களைநாம் புகைப்படத்தின் வாயிலாக நாம் அதற்கு தெரியப்படுத்துகையில் அதற்கான மொழிபெயர்ப்பினையும் நாம் பெறலாம்.

மேலும் படிக்க

ஸ்மார்ட்போனிற்கு தேவையான பொருட்களை வாங்க அதிகமாக செலவழிப்பதாக உணர்கிறீர்களா.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
7 intresting ways to use your smart phones
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்