கனெக்ஷன் அல்லது இன்வேலிட் எம்எம்ஐ கோட் சிக்கலை தீர்க்க எளிய டிப்ஸ்..!

கனெக்ஷனில் ஏற்ப்படும் சிக்கல் அல்லது இன்வேலிட் எம்எம்ஐ கோட் சிக்கலை யூஎஸ்எஸ்டி கோட் பயன்படுத்தி தீர்க்கலாம் அதெப்படி.?

Written By:

நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர் என்றால், யூஎஸ்எஸ்டி கோட் டயல் செய்யும் போது பலமுறை 'இணைப்பு சிக்கல் அல்லது தவறான எம்எம்ஐ குறியீடு' என்ற ஒரு செய்தியை பெற்று இருப்பீர்கள்.

இந்த பிழையானது பொதுவாக இரட்டை சிம் மொபைல் போன்களில் அதிகமாகவும் சில நேரங்களில் ஒற்றை சிம் போன்களிலும் கூட ஏற்படுகிறது. இது பெரும்பாலும் கேரியர் பிரச்சினைகள் அல்லது சிம் அங்கீகார பிரச்சினைகள் காரணமாக ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை விட்டு வெளியேற இங்கு 5 பயனுள்ள மற்றும் எளிமையான வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

பொதுவாக அனைத்து ப்ரீ-இன்ஸ்டால்ட்டு ஆப்ளிகேஷன்களில் சேப் மோட் டிஸ்ஏபிள் செய்யப்பட்டு இருக்கும். அதை எனேபிள் செய்வது நல்லது. அதை நிகழ்த்த முதலில் சுவிட்ச் ஆப் செய்யுங்கள் பின்னர் பவர் பட்டனை ஆன் செய்யும் போது சேப் மோட் ஆப்ஷன் உங்கள் திரையில் தோன்றும் வரையிலாக தொடர்ந்து மெனு பட்டனை தட்டி கொண்டே இருக்கவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

உங்கள் இணைப்பு பிரச்சினையை தீர்க்க மற்றொருமாற்று வழி மிகவும் எளிமையானது. நீங்கள் பயன்படுத்தும் குறியீடுக்கு (*135#) முன்பு ஒரு காற்பள்ளி (,) சேர்க்க வேண்டும். அல்லது நீங்கள் பிளஸ் (+) குறியீடும் சேர்க்கலாம்.

வழிமுறை #03

இன்னொரு வழிமுறையானதற்கு நீங்கள் இன்பர்மேஷன் மோட் எண்டர் செய்து எஸ் எம் எஸ் வழியாக உங்கள் ரேடியோவை ஐஎம்எஸ் ஆக ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்கு *#*#4636#*#* என்ற குறியீடுக்கு டயல் செய்து > போன் இன்பர்மேஷன் > ரன் பிங் டெஸ்ட் கிளிக் செய்யாவும் பின்னர் டெஸ்ட் நிகழ்ந்து முடிந்ததும் ரேடியோவை ஆப் செய்யவும், இப்போது எஸ் எம் எஸ் வழியாக ஐஎம்எஸ் தனை ஆன் செய்யவும். பின்னரே இறுதியாக உங்கள் கருவியை ரீபூட் செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வெறுமனே உங்கள் தொலைபேசியின் பவர் பட்டன் மற்றும் ஹோம் பட்டனை இரண்டையும் உங்கள் கருவியானது ஆப் ஆகும் வரையிலாக ஒன்றாக அழுத்தி பிடிக்க உங்கள் கனெக்ஷன் அல்லது இன்வேலிட் எம்எம்ஐ கோட் சிக்கல் தீரும்.

வழிமுறை #05

அல்லது செட்டிங்ஸ் > நெட்வெர்க் கனெக்ஷன் > மொபைல் நெட்வெர்க்ஸ் > நெட்வெர்க் ஆப்ரேட்டர்ஸ் செல்ல அங்கு நீங்கள் ஒரு நெட்வெர்க் லிஸ்ட் காண்பீர்கள் அங்கு உங்கள் சேவை வழங்குநரை தொடர்ந்து 4 அல்லது 5 முறை தேர்வு செய்யவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

ரகசியமாய் கசிந்த வீடியோ : சியோமி ரகசியம் அம்பலம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
5 Ways to Fix 'Connection Problem Or Invalid MMI Code' Error with USSD Codes. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்