ஃபேஸ்புக்கில் பயனுள்ள செய்தியை அறிய ஐந்து சிறந்த வழிகள்

ஃபேஸ்புக்கில் பயன் உள்ளதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உங்களுக்கு ஐந்து சிறந்த வழிகள் உள்ளது.

By Siva
|

ஃபேஸ்புக் என்பது இன்றைய காலத்தில் உலகின் பெரும்பாலானவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதில் உட்கார்ந்தால் பலருக்கு நேரம் போவதே தெரிவதில்லை. ஆனால் அந்த நேரம் அவருக்கும் அவரை சேர்ந்தவருக்கும் பயனுள்ளதாக இருக்குமா? என்று கேட்டால் விடை கேள்விக்குறிதான்.

ஃபேஸ்புக்கில் பயனுள்ள செய்தியை அறிய ஐந்து சிறந்த வழிகள்

சில சமயம் தேவையில்லாத அரட்டைகள், அத்துமீறும் கருத்து பரிமாற்றங்களால் நேரம் வீணாகிவிடுவதோடு மன அழுத்தமும் ஏற்படுவதுண்டு.

2ஜி / 3ஜி போன்களில் ஜியோ சேவைகளை பயன்படுத்துவது எப்படி.?

இந்நிலையில் தேவையில்லாதவற்றை தவிர்த்து ஃபேஸ்புக்கில் பயன் உள்ளதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உங்களுக்கு ஐந்து சிறந்த வழிகள் உள்ளது. அவை என்னவென்று தற்போது பார்ப்போம்

ஃபேஸ்புக் செட்டிங் செல்லுங்கள்

ஃபேஸ்புக் செட்டிங் செல்லுங்கள்

ஃபேஸ்புக்கை பயனுள்ளவாறு நேரத்தை கழிக்க முதலில் நீங்கள் செட்டிங் செல்ல வேண்டும். அதில் News Feed Preferences என்று ஒரு செக்சன் இருக்கும். அதை நீங்கள் க்ளிக் செய்தால் உங்களுக்கு கீழ்க்கண்டவாறு நான்கு ஆப்சன்கள் தோன்றும்.

1. Prioritize who to see first

2. Unfollow people to hide their posts

3. Reconnect with people you've unfollowed

4. Discover Pages that match your interests

மேற்கண்ட இந்த நான்கு ஆப்சன்கள் தான் உங்களுக்கு பயனுள்ள செய்திகளை தரப்போகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முதல் ஸ்டெப் இதுதான்

முதல் ஸ்டெப் இதுதான்

மேற்கண்ட நான்கு ஆப்சன்களில் முதல் ஆப்சனை க்ளிக் செய்தால் உங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் நீங்கள் லைக் செய்த பக்கங்கள், நீங்கள் ஃபாலோ செய்யும் நபர்களின் பெயர்கள் தோன்றும். அவர்களில் அவ்வப்போது யார் உருப்படியான பதிவுகளை பதிவு செய்வார்கள் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அந்த பெயர்களில் ஒரு க்ளிக் செய்தால் போதும். அவர்கள் போடும் பதிவுகள் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் முதலில் தோன்றும்

இரண்டாவது ஸ்டெப் என்ன தெரியுமா?

இரண்டாவது ஸ்டெப் என்ன தெரியுமா?

மேற்கண்ட நான்கு ஆப்சன்களில் இரண்டாவது ஆப்சனை தேர்வு செய்து க்ளிக் செய்தால் நீங்கள் அன்ஃபாலோ செய்தவர்களின் லிஸ்ட் இருக்கும். அவர்களில் யாருடைய பதிவுகளையாவது நீங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் பெயருக்கு மேல் ஒரே ஒரு க்ளிக் செய்யுங்கள். அவ்வளவுதான் அவர்கள் பதிவு செய்யும் பதிவுகள் உங்கள் முகப்புத்தக்கத்தில் தோன்ற ஆரம்பித்துவிடும்

மூன்றாவதாக இதையும் நீங்கள் செய்யலாம்

மூன்றாவதாக இதையும் நீங்கள் செய்யலாம்

மேற்கண்ட ஆப்சன்களில் நான்காவது ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் லைக் செய்த பக்கங்களின் ஐகான்கள் தோன்றும். மேலும் உங்கள் நண்பர்கள் யாராவது அந்த பக்கத்தை லைக் செய்திருக்கின்றார்களா? என்பதும் அதில் தெரியும். எனவே எந்த ஒரு குறிப்பிட்ட பக்கத்தின் பதிவுகளை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த பக்கத்தின் ஐகான்களில் ஒரு க்ளிக் செய்துவிடுங்கள்.

வேறு என்னவெல்லாம் செய்யலாம்

வேறு என்னவெல்லாம் செய்யலாம்

மேலும் உங்களுக்கு எந்தெந்த பதிவுகளை பார்க்க விருப்பம் இல்லையோ அந்த பக்கத்தை ஹிடன் செய்துவிடவும் ஃபேஸ்புக்கில் ஆப்சன்கள் உள்ளது.

மேலும் ஃபேஸ்புக்கை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்களும் இதே முறையை பின்பற்றி தங்களுக்கு தேவையான முக்கியமான பதிவுகளை மட்டும் படிக்கும்படி மாற்றி உங்கள் பொன்னான நேரத்தை பயனுள்ள நேரமாக மாற்றி கொள்ளலாம். என்ன நண்பர்களே இன்றே இதை செய்துவிடுவீர்களா?

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
5 simple methods to control what you see in your Facebook News Feed.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X